மேலும் அறிய

US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகராக காலிபாஃப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு விஷயம் நடக்கும் வரை எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஈரான் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.?

காலிபாஃப் ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, உறுதியான முடிவுகளை அடைவதே நமது ஒரே அளவுகோல் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு விஷயம் நடக்கும் வரை, அமெரிக்கா உடன் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.

காலிபாஃப் கூறியது என்ன.?

வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக, அமெரிக்கா உடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில், ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டு வரும் முகமது பாகெர் காலிபாஃப், ஒரு முக்கிய அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில், ஈரானிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை, எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஈரான் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காலிபாஃப், "எதிரியின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை. நமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, உறுதியான முடிவுகளை அடைவதே நமது ஒரே அளவுகோல்" என்றும் கூறியுள்ளார். 

ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்துள்ள ட்ரம்ப் 

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு மிக நல்ல உடன்படிக்கைக்கு மிக அருகில் இருப்பதாக கூறினார். அதே நேரம், வாஷிங்டன், தான் விரும்புவதை பெறாவிட்டால், வேறு வழியில் அதை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இது, தாக்குதல் நடத்துவதையே குறிப்பதாக உள்ளது. ஃபாக்ஸ் நியூஸில் ஒளிபரப்பான தனது மருமகள் லாரா ட்ரம்பின் நேர்காணலுக்குப் பிறகு, ட்ரம்பின் இந்த கூற்று வெளியானது.

“அனைத்து அதிகாரங்களும் அமெரிக்காவின் கையில் உள்ளன“

ஈரானியர்கள் சிறந்த பேச்சுவார்த்தையாளர்கள் என்பதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும், தற்போது அமெரிக்காவே மேலோங்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ராணுவ ரீதியாக ஈரான் தோல்வியடைந்துவிட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். "ஆனால், நாங்கள் ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம். அதை எங்களால் செய்து முடிக்க முடிந்தால், அது நல்லது. இல்லையென்றால், நாங்கள் போர் துறையுடன் இணைந்து செயல்படத் தொடங்குவோம்." என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.  அந்த நாளில் தான், அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அன்று முதல், மத்திய கிழக்கு ஒரு போர்க்களமாக இருந்து வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இதற்கிடையே, சில தரைவழி வசதிகளின் செயலாக்கத் திறன்களை இஸ்ரேலிய தாக்குதல்கள் சீர்குலைத்ததைத் தொடர்ந்து, உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் உள்ள மூன்று கடல்சார் தளங்களில், எரிவாயு உற்பத்தியை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால், போர்ச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என்று தோன்றவில்லை. இதனால், மீண்டும் போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சமே, உலக நாடுகள் மத்தியில் பெருமளவில் நிலவி வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget