மேலும் அறிய

TN Exams: கொளுத்தும் வெயில்; தொடக்கநிலை வகுப்புகளுக்கு தாமதமாகும் தேர்வு? - பொங்கிய அன்புமணி

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கமான கோடை வெயில் தன் உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆவது வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் வகுப்புகளுக்கே பொதுத் தேர்வுகள் தொடங்கி முடிவடைய உள்ள நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி உள்ளதாவது:

’’தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் வாடுகின்றனர்!

ஏப்ரல் 15-ஆம் நாளுக்குப் பிறகு தான் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்குமானால்,  இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல் இருக்க முடியாது!

11, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைகின்றன. பத்தாம் வகுப்புக்கு வரும் 6-ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது.  உயர் வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு தொடங்கிய நிலையில் தொடக்க நிலை வகுப்புகளுக்கு தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்?

ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தேர்வு மூலம் மாணவர்களை மதிப்பிட வேண்டிய அவசர, அவசியம் என்ன? வெயில் காலத்தில் இறுதித் தேர்வுகள் அவசியமா? என்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget