School Education Department: STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அறிவிப்பை, திரும்பப் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2022-23ஆம் கல்வி ஆண்டில், STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அறிவிப்பை - திரும்பப் பெறுவதாக, புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
STEM வகுப்புகள்:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள்,உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் தொடக்கம்:
STEM திட்டத்தை ,IIT மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். STEM - Science, technology, engineering,maths ஆகிய பாடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதாகும்.
வாபஸ்
இந்நிலையில் 2022-23ஆம் ஆண்டுகளில் STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க IIT திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்