மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது; ஜூலை 31 கடைசி- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் 'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' விருதை வழங்குகிறது. இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களைச் செய்த சிறந்த சாதனைகள் கொண்ட சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி 'வீர் பால் திவாஸ்' அன்று அறிவிக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு கலை, கலாச்சாரப் பிரிவில் 4 பேருக்கும், துணிச்சல், சமூக சேவை பிரிவில் தலா ஒருவருக்கும், புத்தாக்கம் பிரிவில் 2 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும் என இந்தியா முழுவதும் இருந்து 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என்ன தகுதி?
இந்த விருதை பெற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இந்தியாவில் வசிப்பவராகவும், 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற awards.gov.in இணையதளத்தில் வரும் 2024 ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, துணை ஆவணங்களுடன்ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின்படி, விவரங்களுடன் மகளிர் மற்றும்குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும்.
* முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) க்கான வழிகாட்டுல்களை அறிய awards.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தெரிவித்துள்ளார்