புதுச்சேரி: சென்டாக் மூலம் நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
புதுச்சேரியில் சென்டாக் மூலம் UG Non-NEET படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து சென்டாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்டாக் மூலம் UG Non-NEET படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
TN Board HSC முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, CENTAC 07.05.2024 தேதியிட்ட செய்திக்குறிப்பின்படி, UG Non-NEET சார்ந்த தொழில்முறை படிப்புகள் / UG கலை, அறிவியல் மற்றும் வணிகம் / UG கலை மற்றும் நுண்கலை படிப்புகளுக்கான 2024-2025 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை விண்ணப்பங்களைத் திறந்துள்ளது. விண்ணப்பத்தின் கடைசி தேதி 22/5/2024 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேரள வாரியம் (KERALA BOARD) 9/5/2024 அன்று HSC முடிவுகளை அறிவித்தது. AP வாரியம் (AP BOARD HSC முடிவுகளை ஏப்ரல் 2024 மாதத்திலேயே அறிவித்தது.
இருப்பினும், பல தேர்வு வாரியங்களின் முடிவுகள், குறிப்பாக CBSE, இன்னும் எதிர்பார்க்கப்படுவதால், விண்ணப்பதாரர்கள் CENTAC ஐ அணுகி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், அதாவது 22/5/2024 க்குள் விண்ணப்பங்களைச் சமர்பிப்பதில் அச்சங்களை எழுப்புகின்றனர்.
கால அவகாசம்
இது சம்பந்தமாக, தேர்வு வாரியங்களால் HSC முடிவுகளை அறிவிக்கும் தேதியைப் பொறுத்து CENTAC நிர்வாகம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் கடைசி தேதியை நீட்டிப்பதன் மூலம் போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீட் அல்லாத சேர்க்கை
புதுச்சேரி யு.ஜி புரொபஷனல் படிப்புகள் - பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்.சி. (Hons.) விவசாயம், தோட்டக்கலை, B.V.Sc.&A.H. (PY - GQ/SS & FN மட்டும்), B.Sc. (நர்சிங்), பி.பி.டி., பி.எஸ்.சி. பாரா மெடிக்கல் படிப்புகள், பி.பார்ம்., பி.ஏ.எல்.எல்.பி. (5 ஆண்டுகள்), பாராமெடிக்கல் டிப்ளமோ மருத்துவப் படிப்புகள், இளங்கலை கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள் (B.A., B.SC, B.Com., B.B.A., & B.C.A.) பிராந்தியக் கல்லூரிகள் (6 அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லூரிகள் மட்டும்), நுண்கலை படிப்புகள் (B.P.A & B.V.A), B.Voc. AIAT மற்றும் பி.ஏ. RRU படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் கடந்த 08.05.2024, காலை 11.00 மணி முதல் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். கடைசி தேதி 22.05.2024 ஆகும்