மேலும் அறிய

யோகா, இயற்கை மருத்துவ எம்.டி. படிப்புக்கு ஆக.5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! எப்படி?

யோகா - இயற்கை மருத்துவ எம்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

யோகா - இயற்கை மருத்துவ எம்.டி. படிப்புக்கு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இடங்களுக்கு 2024 - 2025ம் கல்வியாண்டிற்கான எம்.டி மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.  அரும்பாக்கம், செங்கல்பட்டில் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்களும் 17 தனியார் கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம். 

இயற்கை வைத்தியம், இயற்கை உணவு என இயற்கை தொடர்பான படிப்புகள் மாணவர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. உடல்நலத்தை மேம்படுத்துதல், நோய்வரமால் தடுத்தல், நோய் வந்த பின்னர் சரி செய்தல் இழந்த சக்தியை மீண்டும் பெறச் செய்திடன் உள்ளிட்டவை இயற்கையான முறையில் செய்யப்படும் மருத்துவமாகும். 

 M.D. (Yoga and Naturopathy) என்ற மூன்றாண்டு கால படிப்புக்கு  பி.என்.ஒய்.எஸ். என்பது அதாவது ’Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS)’ (பேச்சுலர் ஆஃப் நேச்சுரோபது அண்ட் யோகிக் சயின்ஸ்) என் பெயரில் 5 ஆண்டுகால பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

யாரெல்லம் விண்ணப்பிக்க தகுதி பெறாதவர்கள்?

டிப்ளமோ படித்தவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ இளங்கலை படிப்பை தொலைதூர கல்வி முறையில் படித்தவர்கள், வேறொரு மருத்துவ துறை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியில்லை. 

தேர்ந்தெடுக்கும் முறை:

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தின் தேர்வுக்குழுவால், நடத்தப்படும் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே எம். டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். அதோடு, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கான (விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, https://www.tnhealth.tn.gov.in/  என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள்., கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும். கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று நேரில் வர தவறியவர்கள் இந்தக் கல்வியாண்டில் விண்ணப்பிக்க முடியாது. 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம். கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

 3000/- ரூபாய் விண்ணப்ப கட்டணம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ். பி. ஐ. இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும். 

https://www.onlinesbi.sbi/ - என்ற இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Secretary, Selection Committee,

Directorate of Indian Medicine and Homoeopathy,

Arignar Anna Govt. Hospital of Indian

Medicine Campus, Arumbakkam, Chennai – 600 106

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2023 மாலை 5.00 மணி வரை

இரு குறித்து மேலதிக தகவல்களுக்கு https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N24074254.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget