மேலும் அறிய

PM YASASVI Entrance Test: பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

PM YASASVI Entrance Test 2022: YASASVI எனப்படும் இந்தியாவின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகையை வழங்கும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

YASASVI எனப்படும் இந்தியாவின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகையை வழங்கும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின்‌ இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர்‌ கல்வி உதவித்‌ தொகை திட்டம் தகுதித்‌ தேர்வு 25.09.2022 அன்று நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை, 3 மணி நேரம் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. கணினி வழியில் நடைபெறும் தேர்வுக்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. 

இது 9 வது வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கான உதவித்‌ தொகை திட்டம்‌ ஆகும்‌. இந்த மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. வருமானச் சான்றிதழை மாணவர் சேர்க்கையின்போது பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 

என்ன தகுதி?

இந்தத் திட்டத்தில் இதர பிற்பட்டோர் (OBC), பொருளாதார ரீதியாக பிற்பட்டோர்‌ (EBC), சீர்‌ மரபினர்‌ (DNT) ஆகிய மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டு தேர்வை எழுத முடியும். எனினும் தேவையான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டுதோறும் ரூ.4,000 தொகை உதவித்தொகையாக வழங்கப்படும். 

தேர்வு முறை

கணிதத்தில் இருந்து 30 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதேபோல அறிவியலில் இருந்து 20 கேள்விகளுக்கு 80 மதிப்பெண்களும் சமூக அறிவியலில் இருந்து 25 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களும் வழங்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 5 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆக மொத்தத்தில் 100  கேள்விகளுக்கு 400 மதிப்பெண்கள்.

நெகட்டிவ் மதிப்பெண்கள் எதுவும் இல்லை. தேர்வு கணினி வழியில் 3 மணி நேரம் நடைபெறும். 

PM YASASVI Entrance Test: பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேர்வு மொழி

இந்த தேர்வுக்கான கேள்வித்‌ தாள்கள் இந்தியிலும்‌, ஆங்கிலத்திலும்‌ மட்டுமே கேட்கப்படும். 

9ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 8ஆம் வகுப்புப் பாடத் திட்டமும், 11ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 10ஆம் வகுப்புப் பாடத் திட்டமும் கணக்கில் கொள்ளப்பட்டு, கேள்விகள் கேட்கப்படும். 

தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 5ஆம் தேதி கடைசி நாள் ஆக இருந்தது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மாணவர்கள் விண்ணப்பிக்க: https://yet.nta.ac.in/c/register/ என்ற பக்கத்தை க்ளிக் செய்து முதலில் முன்பதிவு செய்துகொள்ளவும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://yet.nta.ac.in/static/pdf/YASASVI_2022_INFORMATION%20BULLETIN.pdf என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்து படிக்கவும்.

தொலைபேசி எண்கள்: 011 4075 9000 அல்லது 011 6922 7700

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு? வானிலை அறிக்கை விவரம் இதோ..!
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு? வானிலை அறிக்கை விவரம் இதோ..!
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget