மேலும் அறிய

Plus 2 | தொடங்கியது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்.. இதுதான் விவரம்

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தொடங்கியது.

மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவுசெய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.dge.tn.gov.in , www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஜூலை 19ம் தேதியன்று வெளியானது. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்கையில் குழப்பைத்தை தவிர்க்க 12ம் வகுப்பு மதிப்பெண்கள் தசம (decimal System)அடிப்படையில் வெளியிடப்பட்டது.   

தமிழ்நாட்டில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,  12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது (50:20:30). 12ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30 Marks) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

Plus 2 | தொடங்கியது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்.. இதுதான் விவரம்

இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாற நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது.    மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று  உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் 30:30:40 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதாவது, 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பு வழங்கப்பட உள்ளது. 

இதற்கிடையே, சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகளை முடிக்க பள்ளிகளுக்கு வரும் 25-ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் வாசிக்க: 

UGC Guidelines 2021: ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் - யுஜிசி

Ponmudi on Higher Education: ஜூலை 26 முதல் கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்; அமைச்சர் பொன்முடி

Children of Women Prisoners in Tamilnadu : சிறையில் தாய்: குழந்தைகள் நிலை என்ன? அறிக்கை கேட்கும் பள்ளிக்கல்வித் துறை! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Embed widget