மேலும் அறிய

Children of Women Prisoners in Tamilnadu : சிறையில் தாய்: குழந்தைகள் நிலை என்ன? அறிக்கை கேட்கும் பள்ளிக்கல்வித் துறை!

சிறைவாழ் பெண்களினுடைய குழந்தைகளின் கல்விநிலை மற்றும் அவர்கள் சட்டப்படி பெற வேண்டிய சலுகைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் பெண்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய் வேண்டும் என  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்படட்ட சுற்றறிக்கையில், " 05.07.2021 அன்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், பள்ளிக்கல்வி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு சிறையில் உள்ள பெண்களின் குழந்தைகள், அவா்களுடைய கல்வி நிலை குறித்து விவரங்கள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 

மேலும், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ‘சிறைச் சாலைகளில் உள்ள பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்டதன்படி,  பல்வேறு மாநிலங்களில் இத்தகைய சிறைவாழ் பெண்களின் குழந்தைகள் மற்றும் அவா்களுக்கு இலவச கல்விச் சட்டம் 2009 மற்றும் இளைஞா் நீதி சட்டம் 2015 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்காமல் இருப்பதும் கண்டறிந்து அந்த ஆய்வு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது

எனவே, தமிழகத்தில் அத்தகைய சிறைவாழ் பெண்களின் குழந்தைகளின் கல்விநிலை மற்றும் அவர்களின் சட்டப்படி பெற வேண்டிய சலுகைகள் மற்றும் பயன்கள் அனைத்தும் பெற்றரனா என்பது குறித்து விரிவான அறிக்கையை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது. 

Children of Women Prisoners in Tamilnadu : சிறையில் தாய்: குழந்தைகள் நிலை என்ன? அறிக்கை கேட்கும் பள்ளிக்கல்வித் துறை!   

2006ல் நடைபெற்ற R.D. Upadhyaya vs State of Andhra Pradesh & Ors (Civil Writ Petition No. 559 of 1994) வழக்கில், சிறைச் சாலைகளில் உள்ள பெண்களின் குழந்தைகள் பெற வேண்டிய வசதிகளை குறித்த  வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஒரு நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் வயதை எட்டும்வரை சிறந்த உறைவிடம், உடை, உணவு மற்றும் கல்வி கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்வதே ஒரு அரசின் தலையாயக் கடமையாகும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம்,    தனது வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களுக்கு அனுப்பி வைத்தது. 

இருப்பினும், இந்த வழிமுறைகள் சரியான முரையில் பின்பற்றப்படவில்லை. 2021 மார்ச் மாதம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ‘Report on Education status of Children of Women Prisoners in India" என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. அதில், பெண் சிறைவாசிகளின் குழந்தைகள் வாழ்க்கை முறை மிகவும் ஒழுங்கற்ற நிலையில்  இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget