மேலும் அறிய

Pariksha Pe Charcha: மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் பிரதமர் மோடி: பரிக்‌ஷா பே சார்ச்சா விண்ணப்பம் தொடக்கம்

தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும்.

பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக "பரிக்‌ஷா பே சார்ச்சா" என்ற நிகழ்ச்சிக்கு (Pariksha Pe Charcha - PPC 2024)  பதிவு செய்யவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

அது என்ன பரிக்ஷா பே சார்ச்சா?

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். அதேபோல ஆசிரியர்கள், பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் தனியாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

500 வார்த்தைகளுக்கு மிகாமல், மாணவர்கள் தங்களின் கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு அனுப்பலாம். மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிகழ்வு எப்போது நடைபெறும் என்ற விவரத்தை மத்தியக் கல்வி அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மத்தியக் கல்வி அமைச்சகம், ’’மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்துக்கு..!

2024ஆம் ஆண்டுக்கான #ParikshaPeCharcha போட்டியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரும் ஆவலுடன் காத்திருக்கும் பிரதமர் உடனான உரையாடலுக்கான நேரம் இது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் நம் மாணவர்களுக்கு ஆதரவான சமூகத்தை உருவாக்குவோம். தேர்வுகளை வாழ்க்கையின் திருவிழாவாகக் கொண்டாடும்’’ என்று தெரிவித்துள்ளது.

Pariksha Pe Charcha: மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் பிரதமர் மோடி: பரிக்‌ஷா பே சார்ச்சா விண்ணப்பம் தொடக்கம்

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள https://innovateindia.mygov.in/ppc-2024/என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் லாகின் வழியாகவோ, தனி லாகின் வழியாகவோ முன் பதிவு செய்யலாம். ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் தனித்தனி முன்பதிவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்ச்சியில் சுமார் 2050 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போட்டிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி சார்ந்த பொருட்களை பரிசாகப் பெறுவர்.

இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://innovateindia.mygov.in/ppc-2024/ 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Story of Parvesh Verma BJP | கெஜ்ரிவாலுக்கு தண்ணி காட்டியவர்.. டெல்லியின் முதல்வராகும் பர்வேஷ் சிங்?Manapparai School Issue | குழந்தைக்கு பாலியல் தொல்லைஅதிரடி காட்டிய போலீஸ் மணப்பாறை பள்ளியில் பகீர்!Arvind Kejriwal Trails | தோல்வியை நோக்கி கெஜ்ரிவால் காலரை தூக்கும் பாஜக பழிவாங்கிய காங்கிரஸ்! | New DehliPregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக!  டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக! டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Headlines: டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி! ஈரோட்டில் தி.மு.க. வெற்றி - இந்தியாவில் இதுவரை
Headlines: டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி! ஈரோட்டில் தி.மு.க. வெற்றி - இந்தியாவில் இதுவரை
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Embed widget