Indian Post Job: சென்னை அஞ்சல் துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு; மே 26 வரை விண்ணப்பிக்கலாம்!
மேலும் அஞ்சல் வழியாக விண்ணப்ப படிவத்தினை அனுப்பும் போது, 10 ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ், கார் ஓட்டுநர் உரிமம், சாதிச்சான்றிதழ், வேறு கம்பெனியில் பணிபுரிந்ததற்கான அனுபவ சான்றிதழ், போன்றவற்றை உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட்- தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் கீழ் சென்னையில் அஞ்சல் சேவையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பிற்கான அறிக்கை வெளியாகியுள்ளது. Tyreman, Blacksmith மற்றும் StaffcarDriver ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு கடந்த மே 5 ஆம் தேதி வெளியான நிலையில், மே 26 ஆம் தேதி கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது முழு விபரங்களை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புக்கான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் www.indiapost.gov.in என்ற இணைய முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்டப்பட்டுள்ள பணிக்கு ஏற்றாற்போல், தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை அஞ்சல் துறையில் M.V Mechanic 05, Copper & Tinsmith 01, Painter 01, Tyreman 01, M.V Electrician 02, Driver 25 என பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதனை குறிப்பிட்டு, கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை – 600 006. என்ற முகவரிக்கு 26.05.2021-க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறும் வேலை வாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு விண்ணப்பிக்கும் நபர்களின் அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.இல்லாவிடில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சல் வழியாக விண்ணப்ப படிவத்தினை அனுப்பும் போது, 10 ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ், கார் ஓட்டுநர் உரிமம், சாதிச்சான்றிதழ், வேறு கம்பெனியில் பணிபுரிந்ததற்கான அனுபவ சான்றிதழ், போன்றவற்றை உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.