பிளஸ் 2 மற்றும் கல்லூரி தேர்வுகள் வேண்டாம்: நாம் தமிழர் சீமான்
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பளார் சீமான் கோரிக்கை வைத்தார்
பிளஸ் 2 பொது தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பளார் சீமான் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியட்ட செய்திக் குறிப்பில், "கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்". இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.