மேலும் அறிய

NPTEL GATE Portal: கேட் தேர்வுக்கு ஐஐடி சார்பில் இலவச பயிற்சி; மாணவர்கள் பங்கேற்பது எப்படி?

கேட் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள்,  நிதி உதவியுடன் கூடிய முதுகலை மற்றும் நேரடி முனைவர் பட்டத்திற்கான பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஐஐடி சென்னையின் என்பிடெல்- கேட் இணைய முகப்பு (NPTEL- GATE Portal) கேட் தேர்வுக்கான பாடத் தயாரிப்புகளை இலவசமாக வழங்குகிறது. இது போட்டித் தேர்வில் தேர்ச்சிபெற விரும்புவோருக்கு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது.

பொறியியல்,தொழில்நுட்பம், அறிவியல், கட்டிடக்கலை, மானுடவியல் (Humanities) என பல்வேறு முதுநிலைப் பாடங்களில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) என்று அழைக்கப்படுகிறது. கேட் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள்,  நிதி உதவியுடன் கூடிய முதுகலை மற்றும் நேரடி முனைவர் பட்டத்திற்கான பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 7 முதல் 10 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வை எழுதுகின்றனர். 2023-ம் ஆண்டில், ஏறத்தாழ 7 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர், இதில் ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர்.

என்பிடெல்

இதற்கிடயே கேட் தேர்வுக்கான பாடத் தயாரிப்புகளை என்பிடெல்- கேட் இணைய முகப்பு இலவசமாக வழங்குகிறது.தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) என்பது ஐஐடி சென்னை உள்ளிட்ட பல்வேறு ஐஐடி-க்கள் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். பெங்களூரு அமேடியஸ் லேப்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த கேட் இணைய முகப்பு ஆகஸ்ட் 2022-இல் தொடங்கப்பட்டது.

மாதிரி வினாத்தாள்கள்

16 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கேட் தேர்வின் உள்ளடக்கங்கள், அதாவது கடந்த 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை இடம்பெற்ற கேள்விகளை இந்த இணைய முகப்பு வழங்குகிறது. இதன் விரிவான தேர்வுத் தயாரிப்புத் திட்டத்தால் கடந்த ஆண்டைவிட குறிப்பிடத்தக்க அளவில் மாணவர்களின் பங்கேற்பு
அதிகரித்துள்ளது.

என்பிடெல்-கேட் இணையமுகப்பின் தாக்கம் குறித்து விவரித்த என்பிடெல்- ஐஐடி சென்னையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, ‘’கேட் தரவரிசையில் மிகச் சிறந்த முறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்னரே தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். பலர் மிகுந்த பொருட்செலவு செய்து தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும், ஆன்லைன் தளங்கள் மூலமும் பயிற்சித் தேர்வுகளை எழுதுகின்றனர்.

மாதிரித் தேர்வு

என்பிடெல்- கேட் இணையமுகப்பு 2007 முதல் 2022 வரையிலான முந்தைய ஆண்டுகளின் கேள்விகளை (PYQs) வழங்குகிறது. 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கேட் தேர்வுகளின் தலைப்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது. மின்சாரப் பொறியியல், இயந்திரப் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், மின்னணு மற்றும் தொலைத்தொர்பு, இயற்பியல், வேதியியல் ஆகிய 6 முக்கிய பாடங்களில் 115 மாதிரித் தேர்வுகளை கடந்த ஆகஸ்ட் 2022 முதல்
பிப்ரவரி 2023 வரை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். 

கடந்த 15 அக்டோபர் 2023ல் தொடங்கிய தற்போதைய செமஸ்டரில் முந்தைய 6 தேர்வுகளுடன் உயிரிப் பொறியியல் உள்பட 7 பாடங்களில் மொத்தம் 19 மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். நேரடித் தயார்படுத்தும் அமர்வுகளில் அதிகளவில் மாணவர்கள்பங்கேற்றுள்ளனர். 521 முதல்கட்ட அமர்வுகளில் 3,975 மாணவர்களும், 367 இரண்டாம் கட்ட அமர்வுகளில் 3,321 மாணவர்களும் பங்கேற்றனர். மூன்றாம்
கட்ட நேரலை அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் அத்தியாவசிய கேட் தலைப்புகளை உள்ளடக்கியதாக இந்த கலந்துரையாடல் பாடங்கள் அமைந்திருக்கின்றன’’ என்று தெரிவித்தார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaithilingam joined DMK: திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaithilingam joined DMK: திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Top 10 News Headlines: திமுகவில் வைத்திலிங்கம், NDA கூட்டணியில் அமமுக, தாறுமாறாக உயர்ந்த தங்கம், ஈரானை எச்சரித்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
திமுகவில் வைத்திலிங்கம், NDA கூட்டணியில் அமமுக, தாறுமாறாக உயர்ந்த தங்கம், ஈரானை எச்சரித்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Gold Rate Peaks Jan.21st: உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
Embed widget