பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும், பிற மாநிலங்களின் கருத்துக்களும், சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு ரத்து செய்யப்பட்டது குறித்த பின்னணியையும் முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும் கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்துக்களை கேட்ட பின்,  இரண்டு தினங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து என்பது சூழ்ச்சியே! - வைகோ

மேலும் அனைத்து மாணவர்களின் கருத்துக்களை இரண்டு நாட்களில் கேட்பது சாத்தியம் இல்லை என்றும்ஆசிரியர்கள், பெற்றோர்களின் கருத்தைக் கேட்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். tnschooledu21@gmail.com என்ற தளத்திலோ, 14417 என்ற எண்ணிலோ பெற்றோர் கருத்துகளை கூறலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் தொடர்பாகவும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், மாநில கல்வித்திட்ட 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்ச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து குறித்து நேற்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "நீண்ட விவாதத்திற்கு பிறகு மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது நம் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. தேர்வுகளுக்காக மாணவர்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. எனவே இந்த தேர்வை ரத்து செய்வதே நல்ல முடிவாக இருக்கும்' எனப் பதிவிட்டிருந்தார். 

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து என்பது சூழ்ச்சித் திட்டமே ஆகும். இந்தத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. கொரோனா குறைந்த பிறகு மாநில அளவிலான பிளஸ் 2 தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்ற முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து - பிரதமருக்கு இபிஎஸ் நன்றி

Tags: Tamilnadu cm stalin anbil mahesh +2 general exam

தொடர்புடைய செய்திகள்

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

NEET : நீட் தேர்வை ரத்துசெய்வது திமுக அரசுக்கு சாத்தியமா? எப்படி?

NEET : நீட் தேர்வை ரத்துசெய்வது திமுக அரசுக்கு சாத்தியமா? எப்படி?

AK Rajan | முதல்வர் ஸ்டாலினின் NEET ஆய்வு அதிரடி! யார் இந்த ஏ.கே ராஜன்?

AK Rajan | முதல்வர் ஸ்டாலினின் NEET ஆய்வு அதிரடி!  யார் இந்த ஏ.கே ராஜன்?

Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

ப்ளஸ்-2 தேர்வுகள் ரத்து அறிவிப்பு - அரசியல் தலைவர்கள் ரியாக்‌ஷன்ஸ்!

ப்ளஸ்-2 தேர்வுகள் ரத்து அறிவிப்பு - அரசியல் தலைவர்கள் ரியாக்‌ஷன்ஸ்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : அனைத்து மாவட்டங்களிலும் சரிந்த கொரோனா தொற்று!

Tamil Nadu Coronavirus LIVE News : அனைத்து மாவட்டங்களிலும் சரிந்த கொரோனா தொற்று!

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!

Sundar Pichai Birthday: பெர்த்டே பாய் சுந்தர் பிச்சையின் இன்னொரு உலகம் இது!

Sundar Pichai Birthday: பெர்த்டே பாய் சுந்தர் பிச்சையின் இன்னொரு உலகம் இது!

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!