மேலும் அறிய

UGC புதிய விதிகள்: பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை, மத்திய அரசின் முக்கிய விளக்கம்! தீர்வு என்ன?

யுஜிசி புதிய விதிகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலுமே செயல்படுத்தப்படுகின்றன- கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் அறிவித்த 'சமத்துவ விதிமுறைகள் 2026' (UGC Equity Regulations 2026) குறித்து பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

யுஜிசி கொண்டு வந்துள்ள சமத்துவ விதிகள், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எதிரானவை என்றும் பொய்ப் புகார் கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை இல்லை என்றும் நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு இந்து அமைப்புகள், மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, "புதிய விதிகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலுமே செயல்படுத்தப்படுகின்றன.

இந்தச் சட்டத்தின் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. இந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும், யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது என்றும் நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

புகார்களைத் தெரிவிக்க தெளிவான வழிமுறைகள் இல்லை

இருப்பினும், இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'சவர்ண சேனா' என்ற அமைப்பின் தலைமையில் பொதுப்பிரிவு மாணவர்கள் யுஜிசி தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய விதிமுறைகளில் பொதுப்பிரிவு மாணவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க தெளிவான வழிமுறைகள் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு தொடர்பான புகார்கள் 2016-17ஆம் ஆண்டில் 173 ஆக இருந்தது, 2023-24ஆம் ஆண்டில் 350-க்கும் மேலாக அதிகரித்துள்ளதாகத் தரவுகளைச் சுட்டிக்காட்டி அவர்கள் கவலை தெரிவித்தனர்.

UGC புதிய விதிகள்: பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை, மத்திய அரசின் முக்கிய விளக்கம்! தீர்வு என்ன?

எதற்காக புதிய விதிகள்?

ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோர் உயர் கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியான துன்புறுத்தல்களால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களது தாயார்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) இந்த விதிமுறைகளை ஆதரித்தாலும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் இதில் இல்லை எனவும், பாகுபாடு குறித்த வரையறைகள் தெளிவாக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

தொடர் எதிர்ப்புகள் மற்றும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பொதுப்பிரிவு மாணவர்களின் புகார்களையும் விசாரித்துத் தீர்வு காண்பதற்கான புதிய அம்சத்தை விதிகளில் சேர்க்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இதுதொடர்பான வழக்கை, விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கனவுகளுக்குச் சிறகு கொடுக்கும் எத்திராஜ்: கல்லூரி வளாகத்தில் புதிய 'ஸ்டார்ட் அப்' புரட்சி!
கனவுகளுக்குச் சிறகு கொடுக்கும் எத்திராஜ்: கல்லூரி வளாகத்தில் புதிய 'ஸ்டார்ட் அப்' புரட்சி!
IISER IAT 2026:அறிவியல் கனவை நனவாக்க பொன்னான வாய்ப்பு! ஐசர் தேர்வு எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?
IISER IAT 2026:அறிவியல் கனவை நனவாக்க பொன்னான வாய்ப்பு! ஐசர் தேர்வு எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?
TN 10th Hall Ticket 2026: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: நாளை முதல் பெறுவது எப்படி?
TN 10th Hall Ticket 2026: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: நாளை முதல் பெறுவது எப்படி?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget