NEET Question Controversy: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வியா? எழும் கண்டனங்கள்!
NEET UG 2025 Exam Question: மருத்துவ நுழைவுத் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வியா? என்று பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி கேட்கப்பட்டதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் தேர்வு மையங்களில் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் வினாத்தாளில் 117-வது கேள்வியாக ஈஸ்ட் மூலம் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு, பீர், ரம், விஸ்கி, பிராந்தி ஆகிய 4 விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இந்தக் கேள்வி குறித்து மருத்துவ நுழைவுத் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வியா? என்று பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
22 லட்சம் பேர் எழுத விண்ணப்பம்
இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 5,453 தேர்வு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், 21,680 தேர்வர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 31 மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனனர்.
தேர்வு எப்படி?
இந்த தேர்வில் இயற்பியல் பிரிவில் கேள்விகள் கடினமானதாக இருந்ததாகவும், வேதியியலில் கேள்விகள் நீளமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர். வேதியியல் சமன்பாடுகள் மற்றும் கணக்கீடுகளுக்கு அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதால், 180 கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியவில்லை எனவும் நிறைய மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
தேர்வர்களின் மதிப்பெண்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை குறையலாம் என்றும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். மேலும், 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என கல்வியாளர்கள் கணிக்கின்றனர்.
இந்த நிலையில், வினாத்தாளில் 117-வது கேள்வியாக ஈஸ்ட் மூலம் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு, பீர், ரம், விஸ்கி, பிராந்தி ஆகிய 4 விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தன.
மருத்துவ நுழைவுத் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வியா? என்று பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






















