மேலும் அறிய

Neet | நீட் தேர்வு எழுத போறீங்களா? : இதை கண்டிப்பாக படிச்சிடுங்க.. சில முக்கியமான டிப்ஸ் இதோ..!

நீட்தேர்வுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள சூழலில் முக்கியமான பாடப்பிரிவுகள், கேட்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பொதுவான கேள்விகள், எதிர்பாராத தவறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நீட் நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கு இடையில் இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள சூழலில் முக்கியமான பாடப்பிரிவுகள், கேட்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பொதுவான கேள்விகள் மற்றும் எதிர்பாராத சிறிய தவறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

செப்டம்பர் 12-ஆம் தேதி மொத்தம் 16.1 லட்சம் மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதவிருக்கிறார்கள். முன்னதாக, ஜூலை மாதத்தில் நீட் தேர்வு முறை மாற்றப்பட்டது, புதிய முறைப்படி, மாணவர்கள் 200 மல்டி-சாய்ஸ் வகை (MCQ) கேள்விகளில் 180 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

நீட் தேர்வு கொரோனா காலத்தில் நடத்தப்படுகிறது. கடந்த வருடம் நீட் தேர்வை எழுதியவர்கள் தேர்வு எளிமையாக இருந்ததாக குறிப்பிட்டார்கள். இதையடுத்து தற்போதும் கோவிட் பெருந்தொற்று காலம் கருதி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேர்வு முகமை எளிமையான கேள்விகளைக் கேட்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகிறார்கள் கல்வியாளர்கள். கடந்த 5 ஆண்டுகளில் வந்த கேள்விகளே மீண்டும் கேட்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கவனிக்க வேண்டிய பாடங்கள்:
 
வேதியியலில், வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள், தனிமங்களை வகைப்படுத்துதல் (ம) ஆவர்த்தன பண்புகள் equilibrium, thermodynamics, electrochemistry kinetics, alkyl halides alcohols phenols aldehydes hydrocarbons, inorganic; complex compound p block elements   ஆகியவையும்,
 இயற்பியலில்- capacitors, dc circuits, emi, wave optics, photoelectric effects, radioactivity, logic gates போன்ற   பாடப்பிரிவுகளில் அதிக கவனம் செலுத்துங்கள். உயிரியலில்-  animal diversity, a structural organisation in animals, cell biology and cell division, biomolecules, human physiology, human reproduction, and reproductive health, morphology biological classification morphology in flowering plants plant physiology, genetics, ecology  போன்ற பாடங்களில் கவனம் தேவை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த பாடங்களிலிருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றிலிருந்து அதிக கேள்விகளை எதிர்பார்க்க முடியும் என்பதால், இந்த பாடங்களை நன்கு தயார் செய்ய வேண்டும்.

மாதிரித்தேர்வு:

நீட் தேர்வு மதிய வேளையான 2 மணிமுதல் 5 மணிவரை நடத்தப்படுகிறது. அது மதிய உணவுக்குப் பிறகான மந்த வேளை. இந்நிலையில் மாணவர்கள் மாதிரித் தேர்வுகளை வீட்டிலேயே எழுதிப் பார்க்க வேண்டும். மாதிரித்தேர்வுகளை எழுதுவது மிகுந்த பலனளிக்கும். அதன் மூலமாக கேள்வியின் வடிவம் மற்றும் தேர்வறை சூழலுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாகவே தயாராக முடியும். எளிமையான, கடினமான கேள்விகள் கேட்கப்படும் விதம் அவற்றிற்கு எவ்வாறு பதிலளிப்பது எப்படி என்பதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ள முடியும்.

பொதுவான தவறுகள்:

நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் கட்டாயமாக கேள்விகளை கவனமாகவும், தெளிவாகவும் படிக்க வேண்டும். கேள்விகளை சரியாக படிக்காத காரணத்தால்தான் சிறிய தவறுகள் நடைபெறுகின்றன. கேள்விகளைப் படித்து, புரிந்து கொண்டுதான் பதிலளிக்க முயற்சிக்க வேண்டும்.

மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள்:

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளை நம்பாதீர்கள். "நீட் ஒத்திவைக்கப்படுமா இல்லையா போன்ற செய்திகளில் இப்போதைக்கு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதற்கு பதிலாக தேர்வுக்கான தயாரிப்பில் கவனம் செலுத்துங்கள், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்வை சிறப்பாக எதிர் கொள்ளுங்கள். 

மற்ற வாய்ப்புகள்:

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தவிர, இந்தியாவில் 575 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கெல்லாம்  நீட் தேர்வுன் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தியாவில் மருத்துவ இடங்கள் பெற முடியாதவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவ வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் படிப்பதற்கான செலவு அதிகம் எனவும் அறிந்துகொள்வது முக்கியமானதாகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
Embed widget