UGC NET 2024 தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை!
UGC NET 2024 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளுடன் பாட வாரியான கட் ஆப் மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
UGC NET 2024 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளுடன் பாட வாரியான கட் ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் ஆகப் பணியில் சேரவும், மாதாமாதம் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
UGC NET தேர்வு:
நெட் நுழைவுத் தேர்வு, பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை தேசியத் தேர்வுகள் முகமைல் (NTA) நடத்துகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது.
இந்த சூழலில், 2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வு, ஜூன் 19ஆம் தேதி நடத்தப்பட்டது. 1,205 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 9,08,580 பேர் எழுதினர். எனினும் நீட் தேர்வு முறைகேடுகள் சர்ச்சையானதை எடுத்து, நெட் தேர்விலும் மோசடி நடந்ததாகக் கூறப்பட்டது.
தொடர்ந்து நெட் தேர்வையே தேசியத் தேர்வுகள் முகமை ரத்து செய்தது. தொடர்ந்து மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதமே வெளியாகும் என்று தகவல் வெளியானது.
National Testing Agency has announced the UGC NET 2024 June exam result. Along with the result, the testing agency has also released the subject-wise cut-offs. pic.twitter.com/zpIGT2i5FC
— ANI (@ANI) October 17, 2024
தெரிந்து கொள்வது எப்படி?
தேர்வர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், தேர்வு முடிவுகள் தள்ளிப் போயின. ஒரு வழியாக, தேர்வு முடிவுகள் நாளை (அக்.18) வெளியாகும் என்று யுஜிசி அறிவித்தது. ஆனால், ஒரு நாளுக்கு முன்னதாக தேர்வு முடிவுகள் இன்றே வெளியிடப்பட்டுள்ளது.
https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்திற்கு சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!