மேலும் அறிய

4-Year UG Courses: இனி 4 ஆண்டு இளநிலை படிப்புகள்; தமிழ்நாடு உள்ளிட்ட 105 பல்கலை.களில் அறிமுகம் 

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் இருந்து 4 ஆண்டுகள் படிக்கும் வகையிலான இளநிலை படிப்புகள் 105 பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் இருந்து 4 ஆண்டுகள் படிக்கும் வகையிலான இளநிலை படிப்புகள் 105 பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

இதில் டெல்லி பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், அசாம் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம் ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், சிக்கிம் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக்கழகங்கள் அடக்கம். 

அதேபோல, ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், ஹேம்வதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி அந்தர் ராஷ்ட்ரிய இந்தி விஸ்வ வித்யாலயா, ராஜீவ் காந்தி பல்கலைக்கழகங்களும் 4 ஆண்டுகள் இளநிலைப் படிப்புகளை வழங்க உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களோடு, ஹரியானா, தெற்கு பீகார் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகங்களும் பட்டியலில் இணைந்துள்ளன.

இவற்றுடன் 40 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 18 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 22 மாநிலப் பல்கலைக்கழகங்கள் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகளை வழங்க உள்ளன. 

2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொகை, 3 அல்லது 4 ஆண்டு காலம் கொண்ட இளநிலைப் படிப்புகளில் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் மாணவர்கள் வெளியேறலாம் என்று பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைப்படி பட்டப் படிப்பின் கால அவகாசம் மாற்றப்பட உள்ளது.  இதன்படி, ஓராண்டு படித்து முடித்தால் இளநிலை சான்றிதழும், இரண்டு ஆண்டுகள் படித்ததற்குப் பிறகு டிப்ளமோ சான்றிதழும் 3 ஆண்டுகள் படிப்புக்குப் பிறகு இளநிலை டிகிரியும் வழங்கப்படும். 

எனினும் 4 ஆண்டு பல்துறை படிப்பே அதிகம் விரும்பப்படும் படிப்பாக இருக்கும். ஏனெனில் இதுவே முழுமையான மற்றும் பலதரப்பட்ட கல்வியின் முழு அளவிலான அனுபவத்தைப் பெறும் வாய்ப்பை அனுமதிக்கிறது.

இதற்கென மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளநிலை படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் கிரெடிட் கட்டமைப்பை (Curriculum and Credit Framework for Undergraduate Programmes) யுஜிசி உருவாக்கி உள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் கூறும்போது, ''ஏற்கெனவே உள்ள தேர்வு அடிப்படையிலான கிரெடிட் அமைப்பு  (Choice-based Credit System- CBCS) மாணவர்களுக்கு பலவகையான துறைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது. எனினும் இதில்,  multidisciplinary மற்றும் inter-disciplinary வகை அம்சம் குறைகிறது. இதை மேம்படுத்தும் வகையில், இளநிலை படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் கிரெடிட் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். 

இதன்படி ஒவ்வொரு செமஸ்டருக்கும் 20 - 22 கிரெடிட் மதிப்பெண்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. செமஸ்டர் 1, 2 மற்றும் 3 ஆகியவை இயற்கை அறிவியல், சமூக அறிவியல், மனிதநேயம், கணிதம் மற்றும் கணக்கியல் சிந்தனை மற்றும் பகுப்பாய்வு மற்றும் தொழிற்கல்வி போன்ற கற்றலின் முக்கிய பகுதிகள் பற்றிய புரிதலை வளர்க்க முயற்சி செய்கின்றன.

செமஸ்டர் 4, 5 மற்றும் 6-ல் மாணவர்கள், ஸ்பெஷலைசேஷனைத் தேர்வு செய்துகொள்ளலாம். தொடர்ந்து 7 மற்றும் 8ஆவது செமஸ்டர்களில், நவீன inter-disciplinary படிப்புகள் குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
Embed widget