மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயற்சி.. வந்தது அப்டேட்!
குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் 2025-ம் ஆண்டுக்கு மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு ஆர்வலர்களை சேர்க்கவேண்டி "நான்முதல்வன்" திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் 08.10.2024 அன்று காலை 11.00 மணிக்கும், தற்காலிக தெரிவுப்பட்டியல் 08.10.2024 அன்று மாலை 5.00 மணிக்கும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய அதிகாரபூர்வ இணையதளத்தில் www.civilservicecoaching.com இல் வெளியிடப்பட உள்ளது.
குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி:
சென்னை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முழு நேரப் பயிற்சிக்கு 225 நபர்கள், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள், மதுரை மற்றும் கோயம்புத்தூர் முழு நேர பயிற்சிக்கு தலா 100 நபர்கள் வீதம் 200 நபர்கள் ஆக மொத்தம் 525 ஆர்வலர்கள் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும், 14.10.2024 முதல் 17.10.2024 வரையிலான நான்கு நாட்களில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய நாட்களில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
பயிற்சி வகுப்புகள் எப்போது?