எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை: தற்காலிக பட்டியல் வெளியீடு- இறுதிசெய்ய நாளை கடைசி
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான 3ஆம் கட்டக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தற்காலிக மாணவர் சேர்க்கை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதை இறுதி செய்ய நாளை காலையே கடைசி ஆகும்.
2024ஆம் ஆண்டு நீட் தேர்வு கலந்தாய்வு ஜூலை 24ஆம் தேதி அன்று தொடங்கிய. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலில், மருத்துவக் கலந்தாய்வு குழு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்குக் கலந்தாய்வை நடத்துகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வுகளை நடத்துகிறது.
3ஆம் கட்டக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை பட்டியல்
2 கட்டக் கலந்தாய்வுகள் முடிந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான 3ஆம் கட்டக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.
இந்த முடிவுகளில் ஏதேனும் குறைபாடு/ புகார்கள் இருந்தால், மாணவர்கள் https://uggrievances.tnmedicalonline.co.in என்ற இணைப்பில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்குள் (10.00 AM of 18.10.2024) இதை மேற்கொள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
நாளை இறுதி மாணவர் சேர்க்கை பட்டியல்
3ஆம் கட்டக் கலந்தாய்வு சம்பந்தமாக மட்டுமே இந்தத் தளத்தில் பதிவு செய்ய முடியும். அதை அடிப்படையாகக் கொண்டு, இறுதி மாணவர் சேர்க்கை பட்டியல் நாளை (அக்.18) வெளியிடப்பட உள்ளது. அதுவே இறுதிப் பட்டியலாக இருக்கும் என்றும் அதை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, இந்த முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
அரசு ஒதுக்கீட்டில் அரசுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட விவரங்களை அறிய: https://tnmedicalselection.net/news/17102024020835.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். இதில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு நீங்கலாக 92.5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தனியார் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள்
மேலாண்மை ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விவரங்களை அறிய: https://tnmedicalselection.net/news/17102024020634.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 / 044 – 28367822 / 044 – 29862045 / 044 – 29862046
இ - மெயில்: tnmedicaledu2024@gmail.com