மூத்த பேராசிரியரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆக்குங்கள்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பேராசிரியரை துணைவேந்தர் ஆக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தின் தலைவர் அருள் அறம் ஏபிபி நாடுவிடம் கூறும்போது, ’’அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாததே பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளது. தினசரி நடப்புகளையும் பாதித்துள்ளது.
அதனால் தற்காலிகமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூத்த பேராசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
காளிராஜ் என்னும் மூத்த பேராசிரியர் ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக துணை வேந்தராக ஏற்கெனவே பணியாற்றி இருக்கிறார்’’ என்று பேராசிரியர் அருள் அறம் தெரிவித்துள்ளார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















