மேலும் அறிய

Madras University: சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு; சர்வர் கோளாறால் மாணவர்கள் அவதி!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்களின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 29) இரவு வெளியாகின.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்களின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 29) இரவு வெளியாகின. எனினும் சர்வரில் ஏற்பட்ட கோளாறால், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடியாமல், அவதிக்கு ஆளாகினர்.

பாரம்பரியம் மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு விதமான இளநிலை, முதுநிலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டு நவம்பர்/ டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன.

சர்வரில் கோளாறு

அவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 30) இரவு வெளியாகின. எனினும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தேர்வு முடிவுகளை அறிய முயன்றதால் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தின் சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடியாமல், மாணவர்கள் அவதிக்கு ஆளாகினர்.

இரவு வெகுநேரம் வரை நீடித்த பிரச்சினையால் மாணவர்கள் பதற்றமடையத் தொடங்கினர். எனினும் பிறகு தேர்வு முடிவுகள் ஒருவழியாக வெளியாகின.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

குறிப்பாக பி.காம்., பி.காம். சிஏ, பி.காம். (ஏ & எஃப்), பி.காம். (ஹானர்ஸ்) உள்ளிட்ட முதுகலைப் படிப்புகளுக்கும் பி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.காம். ஆகிய படிப்புகளுக்கும் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

பி.காம்., பி.காம். சிஏ, பி.காம். (ஏ & எஃப்), பி.காம். (ஹானர்ஸ்) முதுநிலை மாணவர்கள், https://egovernance.unom.ac.in/results என்ற இணையதளத்திலும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., சமஸ்கிருதம், உருது, அரபு மொழித் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in என்ற இணையதளத்திலும் அறியலாம்.

மறு மதிப்பீடு எப்போது? எப்படி?

தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதிப்பெண்களில் போதாமை ஏற்பட்டு, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், வருகிற ஏப்ரல் 1-ம்தேதி முதல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

Madras University: சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு; சர்வர் கோளாறால் மாணவர்கள் அவதி!

ரூ.1000 கட்டணம்

மறு மதிப்பீட்டிற்கு ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான தொகையை, 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

இளநிலை மாணவர்களும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.300 கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை, 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.unom.ac.in/results.php

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN CM MK Stalin: வாக்குகளுக்காக மக்களை அவதூறு செய்வதா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..
வாக்குகளுக்காக மக்களை அவதூறு செய்வதா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..
Rain Death Toll: தொடர் கனமழை: 11 பேர் உயிரிழந்த சோகம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பேரிடர் மேலாண்மை..
தொடர் கனமழை: 11 பேர் உயிரிழந்த சோகம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பேரிடர் மேலாண்மை..
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு..  யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM MK Stalin: வாக்குகளுக்காக மக்களை அவதூறு செய்வதா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..
வாக்குகளுக்காக மக்களை அவதூறு செய்வதா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..
Rain Death Toll: தொடர் கனமழை: 11 பேர் உயிரிழந்த சோகம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பேரிடர் மேலாண்மை..
தொடர் கனமழை: 11 பேர் உயிரிழந்த சோகம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பேரிடர் மேலாண்மை..
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Breaking News LIVE: பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு!
Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு..  யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
Indian 2 Update: அலறப்போகும் ஸ்பீக்கர்கள்.. “இந்தியன் 2” படத்தின் முதல் பாடல் வெளியாகும் நேரம் அறிவிப்பு!
Indian 2 Update: அலறப்போகும் ஸ்பீக்கர்கள்.. “இந்தியன் 2” படத்தின் முதல் பாடல் வெளியாகும் நேரம் அறிவிப்பு!
Sivakarthikeyan: “வாய்ப்பு வராதே?”  - வெற்றிமாறன் படத்தில் நடிக்க யோசித்த சூரி.. உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!
வாய்ப்பு வராதே?” - வெற்றிமாறன் படத்தில் நடிக்க யோசித்த சூரி.. உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!
Lok Sabha Election 2024: ஒடிசாவில் பாஜக உடனான கூட்டணியை கலைத்த உள்ளூர் தலைவர்கள் - பிஜேடி தலைவர் வி.கே. பாண்டியன்
ஒடிசாவில் பாஜக உடனான கூட்டணியை கலைத்த உள்ளூர் தலைவர்கள் - பிஜேடி தலைவர் வி.கே. பாண்டியன்
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை படைத்த சாதனைகள்; பட்டியலிட்ட அரசு!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை படைத்த சாதனைகள்; பட்டியலிட்ட அரசு!
Embed widget