Madras University Result 2023: சென்னைப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Madras University Result 2023: சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட 5, 6ஆவது செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட 5, 6ஆவது செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இளங்கலைப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள்
குறிப்பாக ஆஃப்லைன் முறையில் தேர்வுகள் நடைபெற்றன. இரண்டு ஷிஃப்டுகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தலா 3 மணி நேரம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன.
வழக்கமாக விடைத் தாள்கள் 4 முதல் 6 வாரங்களில் திருத்தப்பட்டு, வெளியாகும். இதனால், ஜூன் மாதம் 2 ஆவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதமே முடியப் போகும் சூழலில், தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்ட நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 28ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்தது.
எனினும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டுமே 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் அடுத்த ஒரு வாரத்தில் பிற ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியானது.
விடைத் தாள் திருத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாட விடைத் தாள்களைத் திருத்தும் பணி மட்டும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாம்: ABP Nadu Impact: கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது?- சென்னைப் பல்கலைக்கழகம் தகவல்
அறிவித்தபடி தேர்வு முடிவுகள் வெளியீடு
இதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட 5, 6ஆவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இளங்கலைப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் கீழே குறிப்பிட்ட 3 இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம். இதில், பதிவு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, தேர்வு முடிவைப் பெறலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
https://exam.unom.ac.in/results/ugresult.asp
https://egovernance.unom.ac.in/results/ugresult.asp
https://result.unom.ac.in/results/ugresult.asp
இதையும் வாசிக்கலாம்: Exam Time Table: காலாண்டுத் தேர்வு தேதிகள், விடுமுறை எப்போது? பள்ளி நாட்காட்டி இதோ!