மேலும் அறிய

Madras University Convocation: நீண்ட தாமதத்துக்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அறிவிப்பு; எப்போது?

Madras University Convocation 2024: நீண்ட தாமதத்துக்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4ஆவது வாரத்தில் நடைபெறும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். துணை வேந்தர் இல்லாமலேயே இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

பழமையான பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 

எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இதில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

80-க்கும் மேற்பட்ட துறைகள்

பாரம்பரியம் வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் 80-க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இதுவரை பட்டம் வழங்கப்படவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடம் காலியாகவே உள்ளது. ஆளுநர்- மாநில அரசு மோதலால், துணை வேந்தரைத் தேடும் குழு நியமிக்கப்படவில்லை.

இதனால், துணை வேந்தர் நியமனம் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு முடிவுகள், பட்டமளிப்பு விழா உள்ளிட்ட கல்லூரி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக, மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.  

166ஆவது பட்டமளிப்பு விழா எப்போது?

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4ஆவது வாரத்தில் நடைபெறும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. துணை வேந்தர் இல்லாமலேயே இந்த பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது.

முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Rasi Palan Today, Oct 2: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கு
RasiPalan: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
நமது உறவு
நமது உறவு "உசேன் போல்ட்" ஐ விட வேகமாக செல்லும்”: ஜமைக்கா பிரதமர் சந்திப்பில் சுவாரஸ்யமாக பேசிய பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Rasi Palan Today, Oct 2: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கு
RasiPalan: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
நமது உறவு
நமது உறவு "உசேன் போல்ட்" ஐ விட வேகமாக செல்லும்”: ஜமைக்கா பிரதமர் சந்திப்பில் சுவாரஸ்யமாக பேசிய பிரதமர் மோடி
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Embed widget