மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Competency Test: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நவ.28 முதல் திறனறித் தேர்வு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
![Competency Test: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நவ.28 முதல் திறனறித் தேர்வு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Learning Outcome Competency Test For Students Monthly Class 6 to 9 from Nov 28 Know Full Details Competency Test: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நவ.28 முதல் திறனறித் தேர்வு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/c8e11411c4427a1ab8ebd399621d0345169261252829676_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாணவர்கள் | கோப்புப்படம்
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. நவ.28, 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் முறையே 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (சார் Outcome / Competency Based 18509) நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 28.1.2023 முதல் 01.12.2023 வரை படிப்படியாக 6 முதல் 9 ஆம்வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு (Learning Outcome / Competency Based Test) நடத்தப்பட உள்ளது.
- இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
- தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
- வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
- தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
40 நிமிடங்களுக்குத் தேர்வு
- ஒவ்வொரு கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வும் 40 மணித்துளிகளில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் தவறாமல் நடத்த வேண்டும்.
- இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக அந்நாள்வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
தாங்களாகவே விடை எழுத வேண்டும்
- எவ்விதக் குறுக்கீடும் இன்றி மாணவர்கள் தாங்களாகவே விடைத் தெரிவுகளை மேற்கொள்வதைத் தலைமை ஆசிரியர்களும் வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்
- மாணவர்கள் விடையளித்த வினாத்தாள்களை மீண்டும் பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பாசிரியர்கள் பராமரிக்க வேண்டும்.
- தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில், இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாட வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome / Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion