கரூரில் நான் முதல்வன் திட்டத்தின் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
அரசு கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், இந்நிகழ்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டது.
நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலமாக கல்லூரி கனவுகள் வழிகாட்டும் நிகழ்ச்சி கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த சுமார் 1600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கல்லூரி கனவுகள் நிகழ்ச்சியின் மூலமாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பது மற்றும் எந்த கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அரசு கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், இந்நிகழ்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வியில் நிபுணர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி மாணவர்களின் சந்தேகங்களை போக்கினர்.