3 ஆண்டில் முட்டி மோதி திண்டாடும் கரூர் வேளாண்மை கல்லூரி - நிரந்தர தீர்வு கேட்டு பெற்றோர்கள் மனக்குமுறல்
கரூர் உழவர் சந்தை அருகே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் வேளாண்மை கல்லூரி துவங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் வேளாண்மை கல்லூரி பாடத்திட்டங்களை பயின்று வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே அம்மா திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக பணிகள் கடந்த (அதிமுக) ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அம்மா மண்டபத்தில் குறைந்த கட்டணத்தில் தங்களுடைய இல்ல விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் யோசனையில் தொடங்கப்பட்ட அம்மா மண்டபம் தொடங்கப்பட்டது.
பணிகள் நிறைவு பெற்ற நிலையில் திறப்பு விழாக்காக காத்திருக்கப்பட்டபோது திடீரென தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் வேளாண்மை கல்லூரி இடம் பெற்றிருந்த நிலையில் திடீரென சட்டப்பேரவையில் வேளாண்மை கல்லூரிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இடம் தேர்வு நடைபெற காலதாமதம் ஆனநிலையில் 2021-2022 கல்வியாண்டு தொடங்க தற்காலிகமாக கரூர் உழவர் சந்தை அருகே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் வேளாண்மை கல்லூரி துவங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் வேளாண்மை கல்லூரி பாடத்திட்டங்களை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே பேராண்மை கல்லூரிக்கு தேவையான வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இருந்தபோதும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் தேவை குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்ட பின் மூன்றாம் ஆண்டு அனைத்து மாணவ, மாணவிகள் கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சேர்க்கப்பட்டு அங்கு கல்வி பயின்று வருகின்றன. அதே நிலையில் பின் தொடர்ந்து வந்த கல்வி ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லூரியில் போதிய வசதி இல்லை என கூறி கல்லூரியின் முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் விரைவாக உங்கள் அனைவரையும் திருச்சி வேளாண்மை கல்லூரிக்கு மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். கல்லூரியில் முதல்வர் கூறியதை அடுத்து மாணவ, மாணவிகள் சிரமங்களை பொருட்படுத்தாமல் கல்வி பயின்று வந்துள்ளனர். இதே நிலை நீடித்த நிலையில் தற்போது கல்வி ஆண்டு பயிலும் இரண்டாம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளும் ஒன்று கூடி தங்களது பெற்றோர்களை கல்லூரி நிர்வாகத்திடம் வந்து கேட்கும்படி கூறியுள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் பிற மாவட்டத்தில் இருந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இன்று வேளாண்மை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோருடன் உழவர் சந்தை அருகே உள்ள கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உச்சி வெயிலில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் பின்னர் அங்கு கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜா மற்றும் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.
அதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மண்டல தலைவர்கள் பேச்சுக்கிணங்க மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து தங்களது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தகவல் அறிந்து வேளாண்மை கல்லூரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வருகை புரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பிரச்சனைகளை குறித்து கேட்டறிந்தனர். அதை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மேலாண்மை கல்லூரி முதல்வரையும் வரவழைத்து அங்குள்ள குறைபாடுகளை கேட்டு அறிந்தனர். பின்னர் வருவாய் அலுவலர் மாணவ, மாணவிகள் இடையே தங்களது பிரச்சனைகளை ஒவ்வொன்றாக மனுவாக எழுதிக் கொடுங்கள் எனவும் தங்கள் பிரச்சனைகள் ஒரு மாதத்திற்கு காலத்திற்குள் அனைத்தும் தீர்க்கப்படும் என கூறினார். அதை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய வருவாய் அலுவலர் கடந்த மாதம் கூட இந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அவருடன் நானும் லோன் மேலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கி சிறப்பித்துள்ளோம்.
அப்பொழுது கூட மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை கூறியிருக்கலாம் தற்போது சாலை மறியல் செய்யும் அளவிற்கு செல்லாமல் யோசித்து இருக்கலாம் என பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதை தொடர்ந்து மண்டல தலைவர்களும் மற்ற அரசு அதிகாரிகளும் புறப்பட்டனர். இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் பொருத்தம் படுத்தாமல் சாலைகளில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு மண்டல தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து கூல்டிரிங்ஸ் மற்றும் குடிநீர் வாங்கி கொடுத்து அனைவரையும் சமாதானப்படுத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம் அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.