மேலும் அறிய

முதல் பரிசு ரூ.2 லட்சம்; கலைஞர்‌ நூற்றாண்டு விழா குறும்படம், ரீல்ஸ் போட்டிக்கான அவகாசம் நீட்டிப்பு

இந்தப் போட்டிகளுக்காக ஏற்கனவே குறும்படங்கள்‌ மற்றும்‌ சுருள்‌ படங்களை அனுப்பிய போட்டியாளர்கள்‌ அப்படங்களை மீண்டும்‌ அனுப்பத் தேவையில்லை.

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும்‌ வகையில்‌ "தொலைநோக்குச்‌ சிந்தனையாளர்‌- கலைஞர்‌" எனும்‌ குழுவின்‌ சார்பில்‌ குறும்பட போட்டி (Short film Competition) மற்றும்‌ சுருள்பட போட்டி (Reels Competition)-க்கான கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலைஞர்‌ கருணாநிதி‌ நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்‌ தொடர்பாக தொலைநோக்குச்‌ சிந்தனையாளர்‌- கலைஞர்‌ எனும்‌ குழுவின்‌ சார்பில்‌ குறும்படபோட்டி (Short film Competition) மற்றும்‌ சுருள்படபோட்டி (Reels Competition) நடத்துவது தொடர்பான செய்தி வெளியீடு 31.10.2023 அன்று வெளியிடப்பட்டது.

அச்செய்தி வெளியீட்டில்‌ இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன்‌ கூடிய குறும்படங்கள்‌ மற்றும்‌ சுருள்படங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போட்டிகளுக்கான கால அவகாசம்‌ 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

அதனடிப்படையில்‌ குறும்படங்கள்‌ மற்றும்‌ சுருள்‌ படங்கள்‌ பெறப்பட்டு பரிசீலனையில்‌ உள்ளன. இதனை பார்வையிட்ட குழு, மேற்கூறிய தலைப்பில்‌ குறும்படங்கள்‌ மற்றும்‌ சுருள்படங்கள்‌, ஆகியவற்றை சமர்ப்பிக்க மேலும்‌ கால அவகாசம்‌ வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தப் போட்டிகளுக்காக ஏற்கனவே குறும்படங்கள்‌ மற்றும்‌ சுருள்‌ படங்களை அனுப்பிய போட்டியாளர்கள்‌ அப்படங்களை மீண்டும்‌ அனுப்பத் தேவையில்லை.

ஆக.31 கடைசி

புதியதாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொலைநோக்குச்‌சிந்தனையாளர்‌- கலைஞர்‌ (உதாரணமாக சமூக நீதி, கல்வியில்‌ புரட்சி, சுகாதாரத் துறையில்‌ புரட்சி, தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின்‌ உரிமை, பெண்கள்‌ முன்னேற்றம்‌, கிராமப்புற/ நகர்ப்புற வளர்ச்சி) என்ற தலைப்பில்‌ குறும்படங்களை (அதிகபட்சம்‌ 10 நிமிடங்கள்‌) உருவாக்கி அதனை விண்ணப்பங்களுடன்‌ 31.08.2024 தேதிக்குள்‌ (shortfilmkalaignari@gmail.com) என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இதேபோல்‌ சுருள்பட போட்டியில்‌ (Reels) கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ தொலைநோக்குச்‌ சிந்தனையாளர்‌-கலைஞர்‌எனும்‌ தலைப்பில்‌ புதிய சுருள்படங்களை 30 வினாடிகள்‌ முதல்‌ 1 நிமிடம்‌ வரை இருக்கும்‌ வகையில்‌ உருவாக்கி விண்ணப்பங்களுடன்‌ 31.08.2024 தேதிக்குள்‌ (reelskalaignar100@gmail.com) என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

குறும்பட போட்டி (Short film Competition) மற்றும்‌ சுருள்பட போட்டி (Reels Competition)களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் என்ன?

(i) போட்டிக்கு விண்ணப்பித்தல்‌ :- எந்தவொரு இந்தியக் குடிமகனும்‌ இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்‌ ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும்‌ ஒரு படம்‌ மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்‌.

இப்போட்டிக்கு அனுப்பப்படும்‌ குறும்படங்கள்‌ போட்டிக்கு, விண்ணப்பிப்பவரால்‌ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்‌.

எந்தவொரு சமூக வலைதளங்கள்‌ மற்றும்‌ இணையதளத்தில்‌ இடம்‌ பெற்றிருக்க கூடாது. போட்டியாளர்கள்‌ இணைப்பில்‌ உள்ள விண்ணப்பப்‌ படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்‌.

(ii) நுழைவு கட்டணம்‌ :- நுழைவு கட்டணம்‌ இல்லை

(iii) படத்தின்‌ மைய கருத்து — தொலைநோக்குச்‌ சிந்தனையாளர்‌- கலைஞர்‌ உதாரணமாக, சமூக நீதியில்‌ கலைஞரின்‌ சாதனை, கல்வியில்‌ புரட்சி, சுகாதார துறையில்‌ புரட்சி, தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின்‌ உரிமை, பெண்கள்‌ முன்னேற்றம்‌, கிராமப்புற நகர்ப்புற வளர்ச்சி என்பனவற்றில்‌ எதேனும்‌ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மைகளை மைய கருத்தாக அத்துறையில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ தொலை நோக்குச் சிந்தனையில்‌ உருவான திட்டங்கள்‌,/ செயல்பாடுகள்‌, அதனால்‌சமூகத்திற்கு / தமிழ்நாட்டிற்கு எற்பட்ட பயன்கள்‌ குறித்து  விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்‌.

(iv) படத்தின்‌ மொழி :- தமிழ்‌

(Vv) குறும்படத்தின்‌ கால அளவு : -அதிகபட்சம்‌ 10 நிமிடங்கள்‌

(vi) திரைப்பட வடிவம்‌: குறும்படத்தினை (MP4 format, Full HD (1080p) or 1920X1820p) கேமரா அல்லது வேறு சாதனங்கள்‌ மூலமாகவும்‌ எடுக்கலாம்‌. குறும்படத்தின்‌ அளவு 2 ஜிபி-க்கு மேல் இருக்கக்கூடாது. குறும்படத்தின்‌ தயாரிப்பாளர்‌, எழுத்தாளர்‌ மற்றும்‌ இயக்குநரின்‌ பெயர்கள்‌ இடம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

(vil) நடுவர்‌ மன்றம்‌ :- நடுவர்‌ குழு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும்‌.

(vii) பரிசு வழங்குதல்‌ :- விண்ணப்பிக்கும்‌ நபர்களின் குறும்படங்களிருந்து சிறப்பான குறும்படங்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, விண்ணப்பதாரரின்‌ பெயரில்‌ மட்டுமே காசோலை வழங்கப்படும்‌.

(10) பரிசுத்‌ தொகை :- முதல்‌ பரிசு ரூ. 2 இலட்சம்‌, இரண்டாம்‌ பரிசு ரூ.1.50 இலட்சம்‌, மூன்றாம்‌ பரிசு ரூ. 1 இலட்சம்‌.

(x) அனுப்பும்‌ முறை - முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை குறும்படத்துடன்‌ shortfilmkalaignar1O0@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு [Kalaignar short Film Award 2023, என்ற Subject-ல் அனுப்ப வேண்டும்‌. பெரிய அளவிலான குறும்படத்தினை ‘Google Drive’ல்‌ சேமித்து இணைப்பை அனுப்பலாம்‌.

(xi) கடைசி தேதி :- 31.08.2024 (மாலை 6.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ பதிவுகள்‌ ஏற்றுக்கொள்ளப்படாது)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Embed widget
News Hub