JEE Main 2024: பொறியியல் படிக்கலாமா? ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
JEE Main 2024 Hall Ticket: ஜேஇஇ 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
![JEE Main 2024: பொறியியல் படிக்கலாமா? ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி? JEE Main Session 2 Admit Card 2024 Released know how to download JEE Main 2024: பொறியியல் படிக்கலாமா? ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/dcc365b5e9fe865e078c13df61c953141711946884768651_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களாக அறியப்படுகின்றன. இங்கு கற்பிக்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.
முதல் அமர்வு எப்போது?
2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கின. இந்தத் தேர்வுகள் ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன.
4 வகையாகத் தேர்வுகள்
இந்த நிலையில், ஜேஇஇ 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு இன்னும் சில நாட்களில் நடைபெறுகிறது. அதாவது ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் இரு ஷிஃப்டுகளில் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறுகிறது. குறிப்பாக ஏப்ரல் 4, 5, 6, 8, 9 தேதிகளில் பி.இ. / பி.டெக். படிப்புகளுக்கான முதல் தாள் நடக்கிறது. ஏப்ரல் 15ஆம் தேதி, பி.ஆர்க்., பி.பிளானிங். படிப்புகளுக்குத் தனித் தனியாகவும் ஒரே தேர்வாகவும் மெயின்ஸ் தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்.3-ல் தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
* தேர்வர்கள் jeemain.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்துகொள்ளவும்.
* முகப்புப் பக்கத்தில் தோன்றும், "JEE(Main) 2024 : Session- 2 Hallticket" என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* புதிய பக்கம் ஒன்று தோன்றும். அல்லது https://jeemainsession2.ntaonline.in/frontend/web/advancecityintimationslip/admit-card என்ற இணைப்பை க்ளிக் செய்துகொள்ளவும்.
* அதில், உங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி, படிப்பு ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யவும்.
* உங்களுடைய ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
* அதைப் பதிவிறக்கம் செய்து, வருங்காலப் பயன்பாட்டுக்காக வைத்துக்கொள்ளவும்.
ஹால் டிக்கெட் குறித்த அறிவிக்கையைக் காண https://jeemain.nta.ac.in/images/public-notice-for-release-of-admit-card-for-jee-main-2024-session-2.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/
தொலைபேசி எண்: 011- 40759000
இ- மெயில்: jeemain@nta.ac.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)