மேலும் அறிய

JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வுக்கான விடைக் குறிப்புகள் வெளியீடு: ஆட்சேபிப்பது எப்படி?

JEE Main 2024 Answer Key: ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் அமர்வுக்கான விடைக் குறிப்புகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதை ஆட்சேபிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் அமர்வுக்கான விடைக் குறிப்புகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதை ஆட்சேபிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.

2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன.24ஆம் தேதி தொடங்கின. குறிப்பாக தாள் 2ஏ மற்றும் தாள் 2பி ஆகியவற்றுக்கான தேர்வுகள் காலை 9 முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் தேர்வுகள் நடைபெற்றன.

இதில் தாள் 2 ஏ தேர்வுகள், தாள் 2பி-ல், பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் தேர்வுகள் மதியம் 3 முதல் 6 மணி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன.

2 முறைகளில் தேர்வு 

தாள் 2ஏ தேர்வுகள் இரண்டு முறைகளில் நடைபெற்றன. கணிதம் மற்றும் திறன் சார்ந்த தேர்வுகள் கணினி மூலமாகவும் ட்ராயிங் தேர்வுகள் பேனா- காகித முறையிலும் நடைபெற்றன. பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு நடத்தப்படும் முதல் தாளை, 11.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். பி.ஆர்க்  மற்றும் பி.பிளானிங் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட இரண்டாவது தாளை மொத்தம் 55,493 தேர்வர்கள் எழுதினர்.

விடைக் குறிப்புகள்

இந்த நிலையில் இரண்டு தாள்களுக்குமான தற்காலிக விடைக் குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் ஆட்சேபனைக்குரிய விடைகளைத் தேர்வர்கள் ஆட்சேபிக்கலாம். ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 தொகையைச் செலுத்த வேண்டும். இந்தப் பணம் திருப்பித் தர மாட்டப்படாது.

2 முதல் 3 நாட்களுக்கு தற்காலிக விடைக் குறிப்புகள் காண்பிக்கப்படும். அதற்குள் ஆட்சேபிக்க வேண்டும். இதற்கு நாளை (பிப். 8ஆம் தேதி) இரவு 11.50 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் ஆட்சேபணைகளைப் பரிசீலித்து, இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்படும்.

உரிய காரணங்கள், விளக்கங்கள், ஆதாரங்கள் இல்லாமல் அளிக்கப்படும் ஆட்சேபணைகள் கருத்தில் கொள்ளப்படாது. பாட வல்லுநர்கள், தேர்வர்களின் ஆட்சேபணைகளைத் தீர ஆலோசித்து, இறுதி பாடக் குறிப்பை வெளியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைக் குறிப்பைக் காண்பது எப்படி?

* தேர்வர்கள் https://jeemain.ntaonline.in/frontend/web/answer-key-challenge/login-answer என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* பதிவு எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும். 

* எல்லாத் தகவல்களையும் சரியாக உள்ளிட்டு, விடைக் குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/

தொலைபேசி எண்: 011- 40759000 

இ- மெயில்: jeemain@nta.ac.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
நேருக்கு நேர்… விஜய்யுடன் மோதும் உதயநிதி: ஜனநாயகன் vs பராசக்தி- அரசியல் ஆயுதமான சினிமா!
Watch Video: மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
Embed widget