மேலும் அறிய

ITI Admission: கட்டணம் எதுவுமில்லை; உதவித்தொகை உண்டு- ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ITI Admissions 2024: மாணவர்களின்‌ நலன்‌ கருதி 16.07.2024 முதல்‌ 31.7.2024 வரை மேலும்‌ ஐடிஐ மாணவர் சேர்க்கை கால அவகாசம்‌ நீட்டிக்கப்படுகிறது.

ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சியாளர்கள்‌ நேரடி சேர்க்கை தேதி மேலும்‌ நீட்டிக்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு  அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 

தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 305 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன.

ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

இவற்றில்‌ 2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள்‌ சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு 28.06.2024 உடன்‌ நிறைவு செய்யப்பட்ட நிலையில்‌ மாணவர்களின்‌ நலன்‌ கருதி 8-ஆம்‌ மற்றும்‌ 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம்‌ 01.07.2024 முதல்‌ 15.7.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின்‌ நலன்‌ கருதி 16.07.2024 முதல்‌ 31.7.2024 வரை மேலும்‌ கால அவகாசம்‌ நீட்டிக்கப்படுகிறது.

பயிற்சிக்‌ கட்டணம்‌ எதுவும் இல்லை

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள்‌ தாம்‌ விரும்பும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ நேரில்‌ சென்று தாம்‌ விரும்பும்‌ தொழிற்பிரிவை தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரலாம்‌. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பயிற்சிக்‌ கட்டணம்‌ இல்லை.

மாதாமாதம்‌ கல்வி உதவித் தொகை

அதே நேரத்தில் கல்வி உதவித் தொகையாக மாதம்‌ ரூ.750/- வழங்கப்படும்‌. தமிழக அரசு வழங்கும்‌ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள்‌ (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள்‌, கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும்‌ வழங்கப்படும்‌.

சென்ற ஆண்டுகளில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில்‌ 80% பேர்‌ பல முன்னணி தொழில்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்‌. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ இன்றைய தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்‌ 4.0 உள்ளிட்ட பல நவீன தொழில் பிரிவுகளில்‌ தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஏதேனும்‌ ஐயம்‌ எற்படும்‌ நேர்வில்‌ அலைபேசி எண்‌ மற்றும்‌ வாட்ஸ் அப் எண்‌ 9499055689 என்ற எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌ என்று வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skiltraining.In.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. https://nimiprojects.in/detonlineadmission2024/index.php என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான தகவல்களைப் பெறலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
Embed widget