Plus 2 Hall ticket: பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; நாளை முதல் ஹால்டிக்கெட் வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை பிற்பகல் 2 மணி முதல் மாணவர்கள் ஹால்டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
மே மாதத்தில் நடைபெற்ற 2021 பொதுத் தேர்வுகள்
இதற்கிடையே 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன. 10, 11, 12 ஆகிய 3 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.
2023 தேர்வு எப்போது?
மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.
11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
10ஆம் வகுப்புத் தேர்வு
10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 12th Exam Time Table 2022 Tamil Nadu
மார்ச் 13 - மொழித்தாள்
மார்ச் 15- ஆங்கிலம்
மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி
மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை பிற்பகல் 2 மணி முதல் மாணவர்கள் ஹால்டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.