மாணவர்களைத் தகாத வார்த்தையால் திட்டிய ஐ.ஐ.டி. பேராசிரியர் – சர்ச்சைக்குள்ளாகும் விவகாரம்
சீமா மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஐ.ஐ.டி. கரக்பூர் இயக்குநரின் பார்வைக்குத் தற்போது சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பேராசிரியரையும் அவர் அழைத்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
ஆன்லைன் வகுப்பு மாணவர்களை ஐ.ஐ.டி. பேராசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டிபேசும் வீடியோ சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஐ.ஐ.டி. கரக்பூர் பட்டியல் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருவருடச் சிறப்பு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அப்படி ஆன்லைன் வகுப்பு நடத்திய அதன் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவுப் பேராசிரியர் சீமா சிங் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களை, ‘வெட்கமற்றவர்கள்’ என்றும் அவர்களது சாதியப்பிரிவைக் குறிப்பிட்டும் திட்டியுள்ளார்.
தேசிய கீதத்துக்கு அவர்கள் எழுந்து நிற்காத காரணத்தால் அவ்வாறு திட்டியதாகக் கூறப்படுகிறது. சீமா மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஐ.ஐ.டி. கரக்பூர் இயக்குநரின் பார்வைக்குத் தற்போது சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பேராசிரியரையும் அவர் அழைத்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. ‘எங்கள் கல்விக்கூடத்தில் இதுபோன்ற நடத்தைகளுக்கு இடமில்லை. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என இயக்குநர் இதுபற்றிக் கருத்துக் கூறியுள்ளார். கல்வியாளர்கள் சில இந்தப் பிரச்னை குறித்து தேசிய பட்டியல் சாதிகள் கமிஷனின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
Also Read: ஏபிடி டூ பாண்டே- ஐபிஎல் வரலாற்றில் பிடிக்கப்பட்ட டாப்-5 கேட்ச்கள்