ஏபிடி டூ பாண்டே- ஐபிஎல் வரலாற்றில் பிடிக்கப்பட்ட டாப்-5 கேட்ச்கள்
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் இணையதளத்தில் மிகவும் வைரலானது. இந்தச் சூழலில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பிடிக்கப்பட்ட சிறப்பான கேட்ச்கள் என்னென்ன?
ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா பேட்டிங்கின் போது சுனில் நரேனின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அப்போது சுனில் நரேன் அடித்த பந்தை பஞ்சாப் வீரர் ரவி பிஷ்னோய் சிறப்பாக ஓடி வந்து டைவ் அடித்து பிடித்தார். இந்த அற்புதமான கேட்சை பஞ்சாப் வீரர்களே சற்று வியந்து பார்த்தனர். அத்துடன் ட்விட்டரிலும் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்ச் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை பிடிக்கப்பட்ட டாப் 5 கேட்ச்கள் என்னென்ன?
5.மனிஷ் பாண்டேவின் டைவிங் கேட்ச்:
https://www.iplt20.com/video/212244/catch-marvel-superman-ish
2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷான் அடித்த பந்தை சன்ரைசர்ஸ் வீரர் மனிஷ் பாண்டே லாங் ஆன் பகுதியில் சிறப்பாக ஓடி வந்து டைவ் அடித்து பிடித்தார். இந்த கேட்சை பலரும் பாராட்டியிருந்தனர்.
4. பொல்லார்டின் ஒரு கை கேட்ச்:
https://www.iplt20.com/video/161544/m15-mi-vs-csk-suresh-raina-wicket?tagNames=indian-premier-league&references=CRICKET_TEAM:1
2019ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இதில் சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா அடித்த பந்தை டீப் பாயின்ட் பகுதியில் நின்று கொண்டிருந்த பொல்லார்ட் சிறப்பாக குதித்து ஒரு கையில் பிடித்து அசத்தினார். மிகவும் வேகமாக அடிக்கப்பட்ட பந்தை பொல்லார்டு லாவகமாக பிடித்தார்.
3. ட்ரென்ட் போல்ட் அசத்தலான் கேட்ச்:
https://www.iplt20.com/video/124017/boult-from-the-blue-trent-s-one-handed-screamer-stuns-virat
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி-பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி அடித்த பந்தை டெல்லி அணியின் ட்ரென்ட் போல்ட் பவுண்டரிக்கு அருகில் சிறப்பாக குதித்து பிடித்த் அசத்தினார்.
2. கேட்ச் பிடித்து எல்லை கோட்டை தொடாமல் விழுந்த கிறிஸ் லின்:
https://www.iplt20.com/video/26522
2014ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஏபிடிவில்லியர்ஸ் பந்தை சிக்சருக்கு விரட்ட முற்பட்டார். அந்த சமயத்தில் கொல்கத்தா வீரர் கிறிஸ் லின் சிறப்பாக பந்தை பிடித்து லாவகமாக பின்னால் திரும்பி விழுந்து பவுண்டரி கோட்டை தொடாமல் இருந்தார். இது பெங்களூரு அணி வீரர்களையும் மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
1. ஏபி டிவில்லியர்ஸ் ஸ்பைடர்மேன் கேட்ச்:
https://www.iplt20.com/video/139234/spiderman-superman-ab-man
கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான ஃபீல்டர்களில் ஒருவர் ஏபி டிவில்லியர்ஸ். தனது மின்னல் வேக ஃபீல்டிங்கின் மூலம் பலரை வியக்க வைத்தவர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த பந்தை மின்னல் வேகத்தை ஸ்பைடர்மேன் போல் பறந்து பிடித்தார். இந்தக் கேட்ச் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சிறந்த கேட்சாக அமைந்தது.
இவை தவிர மேலும் பல கேட்ச்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2010ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டேவிட் ஹசி டெல்லி அணிக்கு எதிராக பிடித்த கேட்ச் மிகவும் சிறப்பானதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.