IIM Calcutta: படிக்கும்போதே மாதம் ரூ.1.65 லட்சம் பயிற்சி உதவித்தொகை; ஐஐஎம் கல்கத்தா மாணவர்கள் சாதனை
எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவர்கள் படிக்கும்போதே மாதம் ரூ.1.65 லட்சம் பயிற்சி உதவித்தொகை பெற்று சாதனை படைத்துள்ளதாக ஐஐஎம் கல்கத்தா பெருமிதம் தெரிவித்துள்ளது.
எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவர்கள் படிக்கும்போதே மாதம் ரூ.1.65 லட்சம் பயிற்சி உதவித்தொகை (Monthly Stipend) பெற்று சாதனை படைத்துள்ளதாக ஐஐஎம் கல்கத்தா பெருமிதம் தெரிவித்துள்ளது.
கடினமான நடப்பு சந்தை சூழலிலும் ஐஐஎம் கல்கத்தா மாணவர்கள் கோடைக்கால உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) பெறத் தேர்வாகினர். 2 ஆண்டு கால எம்பிஏ படிப்பைப் பொறுத்தவரை 466 மாணவர்களுக்கு 513 ஆஃபர்கள் கிடைத்தன. குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 18ஆம் தேதி பிளேஸ்மென்ட் முடிந்தது.
இதையும் வாசிக்கலாம்: NAS Exam: நவ.3-ல் மாநில திறனறித் தேர்வு; தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் 11 கோடி மாணவர்கள் பங்கேற்பு
ரூ.1.65 லட்சம் பயிற்சி உதவித் தொகை
இதன்படி எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவர்கள் படிக்கும்போதே சராசரியாக மாதத்துக்கு ரூ.1.65 லட்சம் பயிற்சி உதவித் தொகை பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகபட்சமாக மாதம் ரூ.1.7 லட்சம் உதவித் தொகையை ஒரு மாணவர் பெற்றுள்ளார்.
"எந்த மாணவரையும் விட்டுவிடக்கூடாது" என்ற நோக்கத்தை நிலைநிறுத்துவதில் சிறப்பான தன்மையுடன் ஐஐஎம் கல்கத்தா செயல்பட்டது. ஏனெனில் இது வேலைவாய்ப்பு செயல்முறையைத் தேர்ந்தெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்தது என்று ஐஐஎம் கல்கத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடினமான நடப்பு சந்தை சூழலிலும் ஐஐஎம் கல்கத்தா மாணவர்கள் கோடைக்கால உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) பெறத் தேர்வாகி உள்ளதாக ஐஐஎம் கல்கத்தா பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!