ICSE, ISC Exam Datesheet 2025: ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு: இதோ அட்டவணை!
ICSE, ISC Exam Datesheet 2025: ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கின. மார்ச் 27ஆம் தேதி தேர்வுகள் முடிவு பெறுகின்றன.
2025ஆம் ஆண்டு ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியத்துக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பிப்ரவரி 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அட்டவணையை ஒட்டியே இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) மற்றும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் (ISC) தேர்வு தேதிகளை அறிவிக்கும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது
அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் வெளியானதில் இருந்தே, ஆண்டு ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியத்துக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதன்படி ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கின. மார்ச் 27ஆம் தேதி தேர்வுகள் முடிவு பெறுகின்றன. ஐஎஸ்சி 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிகின்றன.
ICSE, ISC Exam Datesheet 2025: டவுன்லோடு செய்வது எப்படி?
* மாணவர்கள் cisce.org என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதன் முகப்புப் பக்கத்தில் தோன்றும் 'Download ICSE (Class 10) or ISC (Class 12) datesheet 2025' என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* புதிய பக்கம் தோன்றும்.
* அதில் தோன்றும் அட்டவணையை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அல்லது நேரடியாக https://cisce.org/wp-content/uploads/2024/11/ICSE-Timetable-with-Instructions.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து ஐசிஎஸ்இ தேர்வு தேதிகளை அறிந்துகொள்ளலாம்.
அதேபோல, https://cisce.org/wp-content/uploads/2024/11/ISC-Timetable-with-Instructions.pdf என்ற இணைப்பைச் சொடுக்கி, ஐஎஸ்சி தேர்வு தேதிகளைப் பெற முடியும்.
கடந்த ஆண்டு எப்படி?
2024ஆம் ஆண்டு CISCE வாரியத்தின் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 3.43 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 10ஆம் வகுப்பு தேர்வை 1,30,506 மாணவர்கள், 1,13,111 மாணவிகள் எழுதினர். தேர்வு எழுதியோரில் 1,29,612 மாணவர்கள் மற்றும் 1,12,716 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்பில் 47,136 மாணவிகளும் 52,765 மாணவர்களும் தேர்வை எழுதினர். அதில், 46,626 மாணவிகள் மற்றும் 51,462 மாணவர்கள் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.