IB Recruitment 2021: இந்திய உளவுத்துறை (ஐ.பி) பணியில் 527 காலி பணியிடங்கள், விண்ணப்பம் செய்வது எப்படி?
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய உளவுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை https://www.mha.gov.in/notifications/vacancies என்று இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவிப்பு வெளியான 21.08.2021 முதல் 60 நாட்களுக்குள், தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Joint Deputy Director / G,
Intelligence Bureau,
Ministry of Home Affairs,
35 S.P. Marg, Bapu Sham,
New Delhi – 21
காலிபணியிடங்கள்:
Deputy Director / Tech | 02 |
Deputy Central Intelligence Officer / Tech | 09 |
Deputy Central Intelligence Officer / Tech – Telephone | 01 |
Junior Intelligence Officer-II/Tech | 168 |
Senior Research Officer | 02 |
Research Assistant | 02 |
Senior Foreign Language Adviser | 01 |
Assistant Central Intelligence Officer / Language | 02 |
Assistant Central Intelligence Officer-I / Executive |
56 |
Assistant Central Intelligence Officer-II / Executive | 98 |
Assistant Intelligence Officer-I / Executive | 13 |
Personal Assistant | 02 |
Accounts Officer | 03 |
Accountant | 24 |
Security Officer (Technical) | 08 |
Assistant Security Officer (Technical) |
12 |
Assistant Security Officer (General) |
10 |
Female Staff Nurse | 01 |
Junior Intelligence Officer – I (Motor Transport) | 21 |
Junior Intelligence Officer – II (Motor Transport) | 31 |
Security Assistant (Motor Transport) | 20 |
Caretaker | 05 |
Halwei cum Cook | 11 |
Multi Tasking Staff (Gunman) |
24 |
Library Attendant | 01 |
விவரம்:
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை, பி.இ, பி.டெக், டிப்ளமோ நர்சிங், முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த காலிபணியிட அறிவிப்பில் பலதரப்பட்ட வேலைகளும், அதற்கான கல்வித்தகுதியும் கோரப்பட்டுள்ளது. காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு https://www.mha.gov.in/notifications/vacancies இணையதளத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை: பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வுமுறை மாருபோடுகிறது. சில பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலமாகவும், சில பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலமாகவும் விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அத்தாட்சி ஆவணங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்கள், நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலின் போது, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கத் தவறியவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.