மேலும் அறிய

TNPSC : ”இவங்கெல்லாம் பாஸ் ஆக வாய்ப்பு இருக்கு” : குரூப் 2, 2ஏ தேர்வுகளை எழுதியவர்கள் சொன்ன சூப்பரான Info

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று தொடங்கி, நடைபெற்றன. தேர்வுகள் பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று தொடங்கி, நடைபெற்றன. தேர்வுகள் பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கு, மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதற்காகத் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பித்தனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர்.

குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்துத் தேர்வர்கள் சிலரிடம் பேசினோம்.

லிபிரியா

''பொதுத் தமிழ் பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. இதில் பெரும்பாலும் பழைய கேள்வித் தாள்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.  பள்ளி மாணவர்களாலும் எழுத முடியும் வகையில் பொதுத்தமிழ் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பொது அறிவு பகுதியில் இருந்து கேள்விகள் எளிதாக இருந்தன.

செல்வ ராம ரத்தினம் 

குரூப் 2 தேர்வு வினாத்தாள் மூலம் டிஎன்பிஎஸ்சி தரமான கேள்வி கேட்கும் சூழலை நோக்கி நகர்வதாகவே பார்க்கிறேன். வரலாறு பகுதியில், ’இடைக்கால இந்தியா’ பிரிவில் ஊகிக்க முடியாத வகையில் கேள்விகள் இருந்தன. பொருளாதாரப் பிரிவில் நடப்பு நிகழ்வுகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இதில், யுபிஎஸ்சி தரத்தில் கேள்விகள் இருந்தன.

புவியியல் பகுதியில் குறைவாகவே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. எப்போதும்போல அல்லாமல், யோசித்து விடை அளிக்கும் வகையில் கேள்விகள் இருந்தன. கணிதப் பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. பொது அறிவு பகுதியிலும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் பாடங்கள் கேட்கப்பட்டிருந்தன. 

அசோக்

பொது அறிவு பகுதி எளிமையாக இருந்தது. பொது ஆங்கிலம் பகுதியில் இலக்கணம் எளிமையாக இருந்தது. கவிதை, உரைநடை பகுதிகள் நேரடியாகவே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வரலாறு, அரசியலமைப்புப் பகுதிகள் எளிமையாக இருந்தன. அறிவியல் பகுதியில் கேள்விகள் மிகவும் குறைவாகவே கேட்கப்பட்டிருந்தாலும், எளிதாகத்தான் இருந்தது. பொருளாதாரப் பகுதியில் தமிழ்நாடு பட்ஜெட்டில் இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

சந்தியா

குரூப் 2 பொதுத்தமிழ் மிகவும் எளிதாக இருந்தது. இதனால், குரூப் 4 பொதுத்தமிழ் கொஞ்சம் கடினமாகக் கேட்கப்படலாம் என்று நினைக்கிறேன். தேர்வுக்குத் தயார் ஆகாதவர்கள்கூட எளிதாக எழுதும் வகையில், கணக்குப் பகுதி இருந்தது. பொது அறிவு பகுதியில் கேள்விகள் கணிக்க முடியாத வகையில் இருந்தன''. 

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget