Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Half Yearly Exam Leave: தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது வரை என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜனவரி 2) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. பின்பு திங்கட்கிழமை ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அரையாண்டு அட்டவணையில் நடந்த மாற்றம்
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. எனினும் ஃபெஞ்சல் புயல் காரணமாக தேர்வுகள் தள்ளிப் போயின.
எனினும் தேர்வு விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதாவது 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் புத்தாண்டான ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு எப்போது?
விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வியாழன், வெள்ளி என 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தொடர்ந்து வார இறுதியான சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. பின்பு திங்கட்கிழமை, அதாவது ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து இன்று இரவுக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.