இந்தியாவின் அசரவைக்கும் தங்க வேட்டை...தங்கத்தை குவிக்கும் தமிழர்கள்!!
Published by: ABP NADU
உலக நாடுகளின் தங்க கையிருப்பில், இந்தியா மட்டுமே 11 சதவீதம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்திய பெண்கள் எப்போதும் தங்கத்தை விரும்புபவர்கள். முக்கிய கொண்டாட்டங்களில் தங்கம் பரிசளிப்பது ஒரு வழக்கமாகவே உள்ளது.
உலகின் மொத்த தங்க கையிருப்பில் இந்தியா 11 சதவீதம் அதாவது 24 ஆயிரம் டன் தங்கம் வைத்திருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
இந்திய பெண்கள் 24 ஆயிரம் டன் தங்கத்தையும் ஆபரண வடிவில் வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் தங்கத்துடனான கலாச்சார பிணைப்பை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் மொத்த கையிருப்பில் தென்னிந்தியா 40% பங்களிக்கிறது. இதில் 28% பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது.
தங்கம் வைத்துள்ள முதல் ஐந்து நாடுகள் அமெரிக்கா(8,000 டன்), ஜெர்மனி(3,300 டன்), இத்தாலி(2,450 டன்), பிரான்ஸ்(2,400 டன்), ரஷ்யா(1,900 டன்).இந்த நாடுகளை விட இந்திய பெண்கள் அதிக தங்கம் வைத்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம்(IMF), சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் கையிருப்பைவிட இந்திய குடும்பங்கள் அதிக தங்கம் வைத்துள்ளன.
உலகளாவிய தங்கத்தின் தேவையை இந்தியா தொடர்ந்து வடிவமைக்கிறது. இதனால் தங்கத்தின் நீடித்த கலாச்சாரம் ஒப்பிட முடியாததாக உள்ளது.