மேலும் அறிய

Temporary Teachers: அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களா? நிரந்தர நியமனம் எப்போது?- ராமதாஸ் கேள்வி

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை அமர்த்த கூடாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் அமர்த்தல் கூடாது என்றும் நிலையான ஆசிரியர்களை  உடனடியாக அமர்த்த வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை மறுநாள் திறக்கப்படவிருக்கும் நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 3,000 இடைக்கால ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக ஆணையிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 13,331 இடைக்கால  ஆசிரியர்களை அமர்த்த பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, அமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்ளும்படியும் வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் கூட, இடைக்கால ஆசிரியர்களைக் கொண்டே பள்ளிகளை நடத்த முனைவது கல்வி வளர்ச்சிக்கு வகை செய்யாது.

இடைக்கால ஆசிரியர்களை அமர்த்துவது  கல்வி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூகநீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. நிலையான ஆசிரியர்களை அமர்த்தும் போது, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும்; ஆனால், இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. அதனால் சமூகநீதி மறுக்கப்படுகிறது.

அதேபோல், நிலையான ஆசிரியராக அமர்த்தப்படும் ஒருவருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்; ஆனால், இடைக்கால ஆசிரியர்களாக அமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை விட குறைவாகும். ஆசிரியர்களை இடைக்காலமாக அமர்த்தி அவர்களின் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது.

நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை. ஒவ்வொரு முறையும் இடைக்கால ஆசிரியர்களை  ஏன் அமர்த்துகிறீர்கள்? என்று வினா எழுப்பப்படும் போதெல்லாம், நிலையான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க காலக்கெடு தேவைப்படுவதாகவும், அதுவரை இடைக்கால ஏற்பாடாகவே இடைக்கால ஆசிரியர்கள் அமர்த்தப்படுவதாகவும் அரசுத் தரப்பில் விடையளிக்கப்படுகிறது. அது சரியல்ல.

எந்த வகையில் நியாயம்?

கடந்த ஆண்டு 13,331 இடைக்கால ஆசிரியர்கள் அமர்த்தப்பட்ட போது, அதிக அளவாக 6 மாதங்களில் அவர்களுக்கு மாற்றாக புதிய நிலையான ஆசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், முழு கல்வியாண்டு முடிவடைந்தும் புதிய ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைக் கூட வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு அமர்த்தப்பட்ட இடைக்கால ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டும் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்?

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? நிலையான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க  அதிக காலம் ஆகும் என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 80 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளனர்.  

அவர்களுக்கு போட்டித்தேர்வு தேவையில்லை என்பது தான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடும் ஆகும். அதனடிப்படையில் அவர்களை நிலையான ஆசிரியர்களாக பணியமர்த்தி காலியிடங்களை நிரப்ப 15 நாட்கள் போதுமானது.  எனவே, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக  நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
Singappen Special Force: CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
TN Weather Update: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
பட்ஜெட் விலைதான்! 215 கிலோமீட்டர் மைலேஜ் தரும் Tata Tiago EV Facelift அறிமுகம் - ரேட் எவ்ளோ?
பட்ஜெட் விலைதான்! 215 கிலோமீட்டர் மைலேஜ் தரும் Tata Tiago EV Facelift அறிமுகம் - ரேட் எவ்ளோ?
பத்திர பதிவு செய்யப்போறீங்களா.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை
பத்திர பதிவு செய்யப்போறீங்களா.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை
EPS ADMK : பழைய பதவியை கொடுக்க முடியாது.! ஷாக் கொடுத்த இபிஎஸ்- தவித்து நிற்கும் அதிமுக மாஜிக்கள்
பழைய பதவியை கொடுக்க முடியாது.! ஷாக் கொடுத்த இபிஎஸ்- தவித்து நிற்கும் அதிமுக மாஜிக்கள்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
Embed widget