பத்திர பதிவு செய்யப்போறீங்களா.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை
சுபமுகூர்த்த தினத்தின் பத்திர பதிவு செய்ய திட்டமிடுபவர்களின் வசதிக்காக ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பத்திரபதிவுதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சொந்த வீடு, நிலம் மக்களின் கனவு
சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்பது நடுத்தரவர்க்க மக்களின் கனவாகும். அந்த வகையில் சிறுக சிறுக சேகரித்த பணத்தை கொண்டு நிலம் வாங்குவார்கள். அந்த நிலைத்தை பத்திர பதிவு செய்வது நல்லநாட்களில் நடைபெற்றால் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சுபமுகூர்த்த தினம் என்று வரும் போது ஒரே நாளில் ஏராளமான மக்கள் பத்திர பதிவு செய்ய விரும்புவதால் அனைவருக்கும் அந்த நாளில் பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிப்பார்கள். அந்த வகையில் சுபமுகூர்த்த தினத்தில் கூடுதல் பத்திர பதிவு செய்வதற்கான டோக்கன் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் சுபமுகூர்த்த தினத்தில் கூடுதல் பத்திரபதிவு செய்யும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பத்திர பதிவு அலைமோதும் கூட்டம்
இது தொடர்பாக பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 29.05.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
கூடுதல் டோக்கன் ஒதுக்கிய பத்திர பதிவுத்துறை
எனவே, வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 29.05.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















