மேலும் அறிய

சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?

மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்? ராமதாஸ் விளக்கம்

மூன்று மொழிக் கொள்கையை தமிழகத்தில் திணிக்கக் கூடாது, மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுகிய காலத்திலேயே புதிய மொழியை கட்டாயப்படுத்துவது மாணவர்களின் கல்விச் சுமையையும், மன அழுத்தத்தையும் அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் மூலம் தமிழக மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் தனித்துவமான மொழிக் கொள்கையை புறக்கணித்து மூன்றாவது மொழியை திணிக்க முயற்சிப்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும்.

பெரும் குழப்பம்

ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 9ஆம் வகுப்பிற்கு மூன்றாவது மொழி, மூன்று ஆண்டுகளில் கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதனை மே 15ஆம் தேதி அன்று திருத்தி, இந்த கல்வியாண்டில் இருந்தே அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 6ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் விருப்ப மொழிகளை கற்று வருகின்றனர். அந்த நிலையை மாற்றி, இரண்டு இந்திய மொழிகள் கட்டாயம் என்ற புதிய நிபந்தனையை கொண்டு வருவது ஏற்புடையதல்ல. இந்தியாவில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகளை கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றதுடன், மாணவர்களின் கல்வி சுதந்திரத்தையும் பாதிக்கும்.
 

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிர்

மொழி என்பது கற்றலின் கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளமும், பண்பாட்டின் வெளிப்பாடும் ஆகும். அதனால் மொழிக் கொள்கை என்பது மக்களின் விருப்பத்தையும், மாநிலங்களின் தனித்துவத்தையும் மதித்து அமல்படுத்தப்பட வேண்டும். ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நாடு முழுவதும் திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.

குறிப்பாக, தமிழக மாணவர்களுக்கு தேவையற்ற கல்விச் சுமையை ஏற்படுத்தும் வகையில் மூன்று மொழிக் கொள்கையை திணிப்பது மாணவர்களின் மனநலத்தையும் கல்வித் தரத்தையும் பாதிக்கும். புதிய மொழியை திடீரென கற்க வேண்டிய சூழல் உருவானால், அது கிராமப்புற மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.

இதையும் வாசிக்கலாம்: CUET UG Date: க்யூட் தேர்வு திடீரென ஒத்திவைப்பு; புதிய தேதி எப்போது? ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி? 

கல்வி உரிமை

எனவே, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து, மாநில மக்களின் உணர்வுகளையும் கல்வி உரிமையையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மூன்று மொழிக் கொள்கையை திணிக்கும் எந்த முயற்சியையும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget