மேலும் அறிய

’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்

புதிய மதிப்பீட்டு முறையில் எழுந்துள்ள புகார்கள் அனைத்தும் எங்கள் நேரடி கவனத்திற்கு வந்துள்ளன. அவற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்- அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

சிபிஎஸ்இ-யின் ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டு முறை மாணவர் நலன் சார்ந்தது, அதிலுள்ள பிழைகள் சரிசெய்யப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டு முறையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை உடனடியாகச் சரிசெய்யப்படும் என்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். இந்த நவீன மதிப்பீட்டு முறையானது முழுமையாக மாணவர்களின் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு மிகவும் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை விரைவுபடுத்தவும், அதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவும் ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டு முறை என்ற புதிய தொழில்நுட்பம் (OSM) நடைமுறைப்படுத்தப்பட்டது.

கணினி வழியாகவே மதிப்பீடு

இந்தத் திட்டத்தின்படி, மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, கணினித் திரை வழியாகவே ஆசிரியர்களால் திருத்தப்படும். இதன் மூலம் விடைத்தாள்கள் தொலைந்து போவது அல்லது மதிப்பெண்களைக் கூட்டுவதில் ஏற்படும் மனிதத் தவறுகள் பெருமளவு குறைக்கப்படும் என அதிகாரிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், இந்த புதிய மதிப்பீட்டு முறையில் சில பிழைகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாகத் தொடர்ந்து பல புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

நான் பொறுப்பு

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எழுந்துள்ள நியாயமான புகார்கள் அனைத்தும் எங்கள் நேரடி கவனத்திற்கு வந்துள்ளன. அவற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

இந்தத் தொழில்நுட்ப முறையில் உள்ள சிறுசிறு பிழைகள் மற்றும் குறைபாடுகள் யாவும் கூடிய விரைவில் முழுமையாகக் கண்டறியப்பட்டு, அவை உடனடியாகச் சரிசெய்யப்படும். எந்தவொரு மாணவரின் கேள்வியும் சந்தேகமும் தீர்க்கப்படாமல் போகாது.

எவ்வித சமரசமும் கிடையாது

மதிப்பீட்டுச் செயல்பாடுகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. விடைத்தாள் திருத்தும் முக்கியமான பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும், உரிய பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் இந்த விவகாரம் குறித்துச் சிறிதும் அச்சப்படத் தேவையில்லை’’ என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கையால் மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள் நீங்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Embed widget