மேலும் அறிய

EPS ADMK : பழைய பதவியை கொடுக்க முடியாது.! ஷாக் கொடுத்த இபிஎஸ்- தவித்து நிற்கும் அதிமுக மாஜிக்கள்

EPS orders AIADMK executives : அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் பழைய பதவியை கொண்டு விளம்பரம் செய்யக்கூடாது என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் மீண்டும் அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெறும் 53 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி 25 எம்எல்ஏக்களோடு தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இதன் மூலம் அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என திட்டமிட்டது. ஆனால் இந்த முடிவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தில் வாக்களித்த 25 பேரின் எம்எல்ஏக்களின் பதவியை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்க சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

மேலும் அதிமுக மூத்த நிர்வாகிகளாக இருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, காமராஜ், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 32 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார் , மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார்.

கட்சி பதவியை பறித்த இபிஎஸ்

இதனால் அதிமுகவிற்கு குழப்பமான நிலை நீடித்ததால் அதிமுகவினருக்கு அமைச்சரவை பதவியை வழங்க முதலமைச்சர் விஜய் மறுத்துவிட்டார். அடுத்தது என்ன செய்வது என தெரியாமல் எஸ்.பி.வேலுமணி டீம் தவித்த நிலையில், இதில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். அதே நேரம் மேலும் 4 எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் எஸ்.பி.வேலுமணி டீம் வேறு வழியில்லாமல் தவித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.  இதில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கரை தவிர மற்ற அனைவரும் எடப்பாடி பழனிசாமி அணியோடு இணைந்தனர். 

 

இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு

இந்த நிலையில் அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக பறிக்கப்பட்ட பதவிகள் மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஷாக் கொடுத்துள்ளார். அந்த வகையில் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை கொண்டு பத்திரிகை விளம்பரம் கொடுக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.  அந்த வகையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இபிஎஸ் அணியில்  இணைந்துள்ள நிலையில், பத்திரிக்கை விளம்பரங்கள், அதிமுக சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பழைய பதவிகளை அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் புகார் தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பழைய பொறுப்புகள் பயன்படுத்த கூடாது

அந்த வகையில் கடந்த புதன்கிழமை வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்தனர். இணைந்தவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த கட்சி பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை கொண்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வாய்ப்பு இல்லையெனவும், ஏற்கனவே உள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பிரித்து வழங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget