மேலும் அறிய

இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம்  பெண்ணிற்கு ஆபாசமான குறுஞ் செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்த நபர் கைது

" இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிற்கு ஆபாச மெசேஜ் "

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் பி.எஸ்.சி விஸ்காம் படித்து முடித்து விட்டு உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை, பல போலியான இன்ஸ்டாகிராம் ID - களிலிருந்து தொடர்பு கொண்ட நபர் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ( 05.04.2026 ) அன்று அந்த நபர் மேற்படி பெண்ணின் சகோதரர் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் பெண்ணை பற்றி அவதூறாக பேசி Post செய்து ஒரு ஆபாச படத்தை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த நபரை கண்டுப் பிடித்து நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட பெண் , வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  தகவல் தொழில் நுட்ப சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

W-37 வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சின்ன போரூர் பகுதியை சேர்ந்த பிரைஸ் கிறிஸ்டன் ( வயது 21 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரைஸ் கிறிஸ்டன் மேற்படி  பெண்ணுடன் சேர்ந்து கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளதும் , இருவரும் ஒன்றாக சேர்த்து குறும் படம் எடுத்த போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரைஸ் கிறிஸ்டன் போலி இன்ஸ்டாகிராம் ஐடிகள் மூலம் தொடர்ந்து பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட பிரைஸ் கிறிஸ்டன் விசாரணைக்குப் பின்னர்.நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை. 40 மாத்திரைகள் பறிமுதல்

சென்னை இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் , காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் திருவல்லிக்கேணி, பி.எம் தர்கா இஸ்மாயில் மைதானம் அருகே கண்காணித்த போது, அங்கு சந்தேகப்படும்படி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

அப்போது சோதனை செய்த போது, அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில்  E-2 இராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் ( வயது 23 ) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து மொத்தம் 40 எண்ணிக்கைகள் கொண்ட Nitrazepam உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணையில் கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவர் மும்பையில் இருந்து இரயில் மூலம் மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும், இவர் E-2 இராயப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என மொத்தம் 12 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கார்த்திக் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget