Educational Tour: நமக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்கலையே? கல்விச் சுற்றுலா மூலம் உலகம் சுற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள்! இப்போ எங்கே?
கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் நிலையில், தற்போது ஜெர்மனி செல்ல உள்ளனர்.

2022- 2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக கோரிக்கையின்போது சட்டமன்றப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் தேசிய/ மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிப்பு வெளியிட்டார்.
வெளிநாட்டு கல்விச் சுற்றுலா
அந்த அறிவிப்பிற்கு இணங்க 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயரநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 4 மன்றப் போட்டிகளில் ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 மாணவர்கள் வீதம் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாணவர்களைப் பாராட்டும் வகையிலும் மறறும் அவர்கள் அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்திலும், தமிழக அரசால் ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒவ்வொரு மன்ற வெற்றியாளர்களும் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குச் சென்று தங்கள் பயணங்களில் இருந்து விரிவான அனுபவத்தையும் அறிவையும் பெற்றனர். நுண்கலை மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களும் அவ்வாறே அழைத்துச் செல்லப்பட்டனர். மன்ற வாரியாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

2023- 2024ஆம் ஆண்டுக்கான அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி அளவில் மன்றச் செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள் 74.02.2024 முதல் 16.02.2024 வரை நடததப்பட்டது, மாநில அளவிலான மன்றப் போட்டிகள் 27.02.2024 முதல் 14.03.2024 வரை நடத்தப்பட்டன.
ஹாங்காங், சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா
முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 மாணவ/மாணவியர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரும் மற்றும் அலுவலர் ஒருவரும் 22.08.2024 முதல் 27.08.2024 வரை ஹாங்காங் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனந் 23.12.2024 அன்று முதல் 27.12.2024 வரை 42 மாணவர்கள், 3 அலுவலர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரும் சிங்கப்பூர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்
23.0.2.2025 முதல் 28.02.2025 முடிய 52 மாணவ / மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர் / அலுவலர்கள் என மொத்த 36 நபர்கள் மலேசியா நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது, 24.05.2025 முதல் 28.05.2025 வரை 22 மாணவ / மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர் / அலுவலர்கள் என மொத்தம் 24 நபர்கள் ஜெர்மன் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
கல்விச் சுற்றுலாவின்போது இக்குழு பார்வையிட உள்ள முக்கிய இடங்கள்
> Munich - City Tour
> Munich — University Visit
> Munich — BMW Museum —- Dachau Concentration Camp - Deutsches Museum
> Munich — Swarovski Crystal worlds — Hungerburg Funicular






















