GATE 2026: முதுகலை பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நீட்டிப்பு! கடைசி தேதி எப்போது தெரியுமா?
2026ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. குறிப்பாக பிப். 7, 8, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தேர்வு நடக்க உள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான முதுகலை பொறியியல் படிப்பு கேட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளில் சேர, GATE எனப்படும் கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. தேர்வர்கள், செப்டம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தாமதக் கட்டணத்தைச் செலுத்தாமலேயே அக்டோபர் 6 வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க அக்டோபர் 9ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் எவ்வளவு?
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி தேர்வர்கள் – ரூ.1000
தாமதக் கட்டணம் – ரூ.1500
பிற தேர்வர்களுக்கு - ரூ.2000
தாமதக் கட்டணம்- ரூ.2500
கேட் தேர்வு எப்போது? (GATE 2026 exam)
2026ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. குறிப்பாக பிப். 7, 8, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தேர்வு நடக்க உள்ளது.
மேலும் இரண்டு ஷிஃப்டுகளாக 30 பாடங்களுக்கு கேட் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தாளும் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறுவது வழக்கம். 2026ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. எனினும் இந்தத் தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் ஐஐடி குவாஹாட்டி தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? (GATE 2026 registration)
- தேர்வர்கள் gate2026.iitg.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தில் இருக்கும் GATE 2026 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டிய ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- முன்பதிவு முடிந்ததும், கணக்கில் உள்நுழையவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.
- மேலும் தேவைக்கு அதன் அச்சிடப்பட்ட நகலை வைத்துக் கொள்ளலாம்.
2026 கேட் தேர்வு குறித்த முழு விவரங்களை https://gate2026.iitg.ac.in/doc/IB/GATE2026-IB-v22082025-1300.pdf என்ற அறிவிக்கையில் பெறலாம்.
தொலைபேசி எண்: +91 361 258 6500
இ மெயில் முகவரி: helpdesk.gate@iitg.ac.in
கூடுதல் விவரங்களுக்கு: gate2026.iitg.ac.in






















