மேலும் அறிய

GATE 2025: பொறியியல் கேட் நுழைவுத் தேர்வு; வெளியான சூப்பர் தகவல்

GATE 2025 Registration: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 26ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்தது. எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான கேட் (Graduate Aptitude Test in Engineering) தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க கேட்என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இந்த நிலையில் ஐஐடி ரூர்க்கி, 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வை நடத்த உள்ளது. கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தேர்வு எப்போது?

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும். அதேபோல பொதுத்துறை நிறுவனங்களில் அரசுப் பணிகளுக்கும் இந்தத் தேர்வு மதிப்பெண்கள் முக்கியமானதாக உள்ளது. 

இந்த நிலையில், கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 26ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்தது. அதே நேரத்தில் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறை

3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.

எனினும் இதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.   

விண்ணப்பிப்பது எப்படி?

* மாணவர்கள் https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவேண்டும். அதில், Apply Online என்ற தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.

* அல்லது நேரடியாக https://goaps.iitr.ac.in/login என்ற இணைப்பையும் தேர்வு செய்யலாம்.

* அதில், Registration பகுதியில் முன்பதிவு செய்ய வேண்டும்.

* தொடர்ந்து, இ- மெயில் முகவரி, கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம்.

* மார்ச் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget